SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மெரினா கடற்கரையை தூய்மையாக பராமரிக்கும் வகையில் திட்டம் வகுக்க மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் காலக்கெடு

2018-12-10@ 13:55:41

சென்னை : உலகின் மிக நீண்ட இரண்டாவது கடற்கரையான சென்னை மெரினாவை தூய்மையாக பராமரிக்கும் வகையில் டிசம்பர் 17ம் தேதிக்குள் திட்டம் வகுக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆழ்கடலில் மீன்பிடிக்க மத்திய அரசின் அனுமதி பெற வேண்டும் என்ற புதிய விதிமுறையை எதிர்த்து மீனவர்கள் நல அமைப்பின் தலைவர் பீட்டர் ராயன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் வினித் கோத்தாரி மற்றும் அனிதா சுமந்த் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மெரினா கடற்கரை பராமரிப்பு குறித்து சென்னை மாநகராட்சிக்கு நீதிபதிகள் கேள்விகளை எழுப்பினர். மெரினா கடற்கரையில் கலங்கரை விளக்கம் அருகே சாலைகளை ஆக்கிரமித்து மீன் கடைகள் இயங்கி வருவது குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், மெரினா கடற்கரைக்கு என ஒதுக்கப்படும் நிதியை கொண்டு மீனவர்களுக்கு மார்க்கெட் அமைக்காதது ஏன் என கேள்வி எழுப்பினர்.

இதுவரை எத்தனை மீனவர்கள் கடை அமைக்க மாற்று இடம் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும் மாற்று இடம் வழங்க வேண்டியவர்களின் விவரங்கள் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என மாநகராட்சிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மெரினா கடற்கரையை தூய்மையாக பராமரிக்கும் வகையில் திட்டம் வகுக்க டிசம்பர் 17ம் தேதி வரை மாநகராட்சிக்கு கெடுவிதித்த நீதிபதிகள், அன்று முதல் இந்த வழக்கு முடியும் வரை சென்னை மாநகராட்சி ஆணையர் தினமும் நீதிமன்றத்தில் ஆஜராகி நீதிமன்றத்திற்கு விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர். 


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • thaneer_laari_kudam11

    குடிநீர் பஞ்சம் எதிரொலி : 'குடம் இங்கே, தண்ணீர் எங்கே?’.. தமிழக அரசை கண்டித்து ஸ்டாலின் தலைமையில் திமுக ஆர்ப்பாட்டம்

  • kali_dogsa1

    கலிபோர்னியாவில் அழகற்ற நாய்களுக்கான போட்டி : 19 நாய்கள் பங்கேற்பு

  • firoilsuthigari11

    அமெரிக்காவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் 2 நாட்களாக பற்றி எரிந்த தீ : மாபெரும் போராட்டத்திற்கு பின் அணைப்பு

  • 24-06-2019

    24-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-06-2019

    23-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்