SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டை நினைவில்லம் ஆக்குவதை எதிர்த்த வழக்கில் அரசு பதிலளிக்க அவகாசம்

2018-12-10@ 12:59:07

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தொடர்ந்த இந்த பொதுநல வழக்கில் மறைந்த தமிழக முதலமைச்சர் செல்வி. செயலலிதாவினுடைய சென்னை போயஸ் தோட்டத்தை தமிழக அரசு நினைவிடமாக மாற்ற நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இது தெடர்பாக அரசு ஆணையை கடந்த ஆண்டு வெளியிட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உட்பட 4 பேரும் குற்றவாளிகள் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. ஆனால் அதற்கு மாறாக அவருக்கு இந்த நினைவிடம் என்பது கட்டப்படுகிறது இது தவறான முன் உதாரணம் ஆகிவிடும் எனவும் அவர் அந்த மனுவில் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் வருமானத்திற்கு பொருந்தாத வகையில் சேர்க்கப்பட்டுள்ள சொத்துக்களை பறிமுதல் செய்யவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில் போயஸ் தோட்டத்தை அரசு நினைவிடமாக மாற்றுவது என்பது தவறானது. இது தொடர்பாக தமிழக அரசு கடந்த ஆண்டு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்தநிலையில் இந்த வழக்கானது இன்று விசாரணைக்கு வந்தது அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கு தொடர்பாக மேலும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்; குறிப்பாக இது தொடர்பாக கூடுதல் மனு ஒன்றை தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஏனென்றால் கடந்த 2 தினங்களுக்கு முன்பு போயஸ் தோட்ட பகுதி மக்களிடம் நடைபெற்ற பொதுமக்கள் கருத்து கேட்பு நிகழ்ச்சியில் கடுமனையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார் என்றும் அது தொடர்பாக தகவல்கள் அடங்கிய ஒரு மனுவை தான் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். இதற்கு அரசு தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது அதாவது ஜனவரி மாதத்திற்கு வழக்கை ஒத்தி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால் நீதிபதிகள் வழக்கை 20ம் தேதிக்கு ஒத்திவைத்து கூடுதல் மனுவை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளனர். அப்போது அந்த வழக்கு விசாரணை நடத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • annauniv

    அண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆவணப்படங்கள் விழா: கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு

  • jammukashmir

    ஜம்மு-காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கியவர்களை கண்டுபிடிக்க தொடரும் மீட்புப்பணிகள்: 7 சடலங்கள் மீட்பு!

  • TulipflowerDay

    நெதர்லாந்தில் தேசிய துலிப் மலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது

  • womesrally

    வுமென்ஸ் மார்ச் 2019: உலகின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் ஒன்று திரண்டு பேரணி

  • turkeycamelfight

    2,000 ஆண்டுகளாக நடந்து வரும் பாரம்பரிய ஒட்டகச் சண்டை: துருக்கியில் கோலாகலத்துடன் ஆரம்பம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்