SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சேலம் பழைய, புதிய பஸ் ஸ்டாண்ட் உள்பட 6 இடத்தில் வைபை தங்கமரம் : ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அமைக்கப்படுகிறது

2018-12-10@ 12:54:51

சேலம்: சேலம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், வைபை வசதியுடன் ‘தங்கமரம்’ வைக்க பழைய, புதிய பஸ் ஸ்டாண்ட் உள்பட 6 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. நாடு முழுவதும் உள்ள 100 நகரங்களை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இத்திட்டத்தில் 3வது பட்டியலில் சேலம் இடம் பிடித்தது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தினை செயல்படுத்த மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, 1000 கோடி மதிப்பீட்டில் அனைத்து உள் கட்டமைப்பு சேலம் நகரில் மேம்படுத்தப்படுகிறது.

முதல் கட்டமாக, 166 கோடியில் திருமணிமுத்தாற்றை அழகுப்படுத்தி பூங்கா அமைக்கும் பணியும், மல்டிலெவல் கார் பார்க்கிங் 2 இடங்களில் அமைக்கவும்,பழைய பஸ் ஸ்டாண்டை இடித்து அகற்றி ஈரடுக்கு பஸ் ஸ்டாண்டாக மாற்றவும், ஸ்மார்ட் சாலை அமைக்கப்படுகிறது. இதன் தொடக்கவிழா வரும் 13ம் தேதி நடக்கிறது. இதனை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைக்கிறார். இதனிடையே தன்னார்வலர்கள் பங்களிப்புடன், மாநகரில் 6 இடங்களில் வைபை தங்கமரம் வைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் சதீஷ் கூறுகையில், ஸ்மார்ட் சிட்டி திட்ட அறிக்கை பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.

முதல் கட்டமாக 200 கோடியில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகனை தமிழக முதல்வர் தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து, ஒவ்வொரு திட்டத்துக்கும் டெண்டர் விடப்பட்டு, பணிகள் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தன்னார்வலர்கள் பங்களிப்புடன், 6 இடங்களில் வைபை தங்கமரம் வைக்கப்படுகிறது. இதில், வைபை வசதி, காற்று மாசு அறிவதை கண்டறியும் கருவி, டிஜிட்டல் போர்டு உள்ளிட்டவை வைக்கப்படும். இந்த தங்கமரம் மாநகராட்சி அலுவலகம், பழைய, புதிய பஸ் ஸ்டாண்ட், சத்திரம், அம்மாப்பேட்டை, கொண்டலாம்பட்டி ஆகிய 6 இடங்களில் வைக்க தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது, என்றார்.    


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • yoga

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் யோகா பயிற்சி மேற்கொண்டுவரும் மக்கள்!

  • octopus

    ஜப்பான் ஆழ்கடலில் நீச்சல் வீரர் ஒருவரை இழுத்து செல்ல முயன்ற ஆக்டோபஸ்: வைரலாகும் காட்சிகள்

  • brainfever

    பீகாரில் மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்வு!

  • pandacub

    உலகிலேயே குறைந்த எடையுடன் பிறந்த மிகச்சிறிய பாண்டா குட்டிகள்: சீனாவில் நிகழ்ந்த அதிசயம்

  • 17-06-2019

    17-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்