SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் நுழைவுக் கட்டணம் அதிரடி உயர்வு... சுற்றுலாப்பயணிகள் அதிர்ச்சி

2018-12-10@ 12:40:16

ஆக்ரா: தாஜ்மஹால் நுழைவுக் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளதால் சுற்றுலாப்பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  உத்தரபிரதேசம் மாநிலம் ஆக்ராவில் உள்ள உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலின்  நுழைவுக் கட்டணம் ரூ.200 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆக்ராவில் ஆய்வு நடத்திய இந்திய தொல்லியல் துறை தலைவர் வசந்த் ஸ்வர்னாகர் கூறுகையில்;

17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட உலக அதிசயங்களில் ஒன்றாக திகழும் தாஜ்மஹாலை காண இதுவரை ரூ.50 நுழைவுக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. மாசுபாடுகளில் இருந்து தாஜ்மஹாலை பாதுகாப்பதற்காக தாஜ்மஹாலை காண வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை குறைக்க முடிவு செய்யப்பட்டு இதற்காக நுழைவுக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் ரூ.250 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ரூ.1,300 செலுத்த வேண்டும்  என அவர் தெரிவித்தார்.  

இதனைத்தொடர்ந்து சார்க் நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் ரூ.540-க்கு பதிலாக ரூ.740 நுழைவுக் கட்டணமாக செலுத்த வேண்டும். ரூ.50 டிக்கெட் பெறும் சுற்றுலா பயணிகள் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதே சமயம் அவர்கள் தாஜ்மஹாலின் வெளிப்புறம் மட்டும் பார்க்க அனுமதிக்கப்படுவார்கள் என்று இந்திய தொல்லியல் துறை தலைவர் வசந்த் ஸ்வர்னாகர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • thaneer_laari_kudam11

    குடிநீர் பஞ்சம் எதிரொலி : 'குடம் இங்கே, தண்ணீர் எங்கே?’.. தமிழக அரசை கண்டித்து ஸ்டாலின் தலைமையில் திமுக ஆர்ப்பாட்டம்

  • kali_dogsa1

    கலிபோர்னியாவில் அழகற்ற நாய்களுக்கான போட்டி : 19 நாய்கள் பங்கேற்பு

  • firoilsuthigari11

    அமெரிக்காவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் 2 நாட்களாக பற்றி எரிந்த தீ : மாபெரும் போராட்டத்திற்கு பின் அணைப்பு

  • 24-06-2019

    24-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-06-2019

    23-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்