SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சீனாவில் பாலத்தில் கவிழ்ந்து அந்தரத்தில் தொங்கிய சரக்கு லாரி : கிரேன் உதவியுடன் ஓட்டுநர் போராடி மீட்பு

2018-12-10@ 11:40:34

பெய்ஜிங் : சீனாவில் பாலத்தில் கவிழ்ந்து கிடந்த லாரியில் இருந்து அந்தரத்தில் தவித்த ஓட்டுநர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார். சீனாவில் ஷாங்க்ஷி மாகாணத்தில் உள்ள நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த ஐந்து வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிய விபத்தில் சரக்கு வாகனம் நிலை தடுமாறி கவிழ்ந்தது. இதனால் சரக்கு லாரியின் முன்பகுதி பாலத்திற்கு கீழே அந்தரத்தில் தலைகுப்புற தொங்கி கொண்டிருந்தது.

இதையடுத்து ஓட்டுநர் காயம் அடைந்து வெளியே வர முடியாமல் தவித்த நிலையில் தீயணைப்பு வீரர்கள் நிகழ்வு இடத்திற்கு சென்று அவரை பத்திரமாக மீட்டனர். இதையடுத்து 1 மணி நேரத்திற்கு பின் கிரேன் உதவியுடன் ஓட்டுநர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அதிவேகமாக சென்றதே இந்த விபத்திற்கு காரணம் எனக் கூறப்படுகிறது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். 


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-03-2019

    24-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-03-2019

    23-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • SuperWormMoon

    2019ம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்..: கண்களுக்கு விருந்தாக அமைந்த பூரண நிலவின் புகைப்படங்கள்

  • sharkpalne

    உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த 'ஷார்க் ப்ராபிட் ஹண்டர்' விமானம் தற்போது டெல்லியில் விஜயம்

  • iraqnewyear

    ஈராக்கில் தீப்பந்தங்களை ஏந்தி நியூரோஷ் புத்தாண்டை வரவேற்ற குர்தீஷ் மக்கள்: வாணவேடிக்கைகளுடன் உற்சாக கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்