SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரான்ஸ் நாட்டில் எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து தொடரும் போராட்டம்: நாடு முழுவதும் சுமார் 1,700 பேர் கைது

2018-12-10@ 11:01:47

பாரிஸ்: பிரான்ஸ் நாட்டில் எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து மஞ்சள் ஜாக்கெட் போராட்டத்தில் தொடர்ந்து 90,000 ஆயிரம் பாதுகாப்பு படையினர் தெருக்களில் பாதுகாப்பு பணிக்கு ஈடுபடுத்தபட்டுள்ளனர். பாரிஸ் நகரில் மட்டும் சுமார் 8,000 அதிகாரிகள் மற்றும் 12 கலவர தடுப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அங்கு தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. தற்போது வரை போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 1,700 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போராட்டத்தில் ஏற்பட்ட மோதலில் 179 பேர் காயமடைந்தனர்.

பிரான்ஸ் நாட்டில்  சமீபத்தில் டீசல் மீதான வரி உயர்த்தப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 1-ம் தேதி தலைநகர் பாரிஸ் உட்பட பல்வேறு நகரங்களில் லட்சக்கணக்கானோர் மஞ்சள் ஜாக்கெட் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பல இடங்களில் வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. இதையடுத்து எரிபொருள் விலை உயர்வை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக பிரான்ஸ் அரசு அறிவித்தது.

இருப்பினும் மேலும் பல சலுகைகளை அறிவிக்கக் கோரி பாரிஸ் உள்ளிட்ட நகரங்களில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெறும் என்று மஞ்சள் நிற உடையணிந்த போராட்டக்காரர்கள் அறிவித்தனர். போராட்டத்தை தடுக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதுடன் தண்ணீரைப் பீய்ச்சியும் அடித்தனர். அப்போது போலீஸார் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்கினர். இதனால் இரு தரப்புக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. தற்போது பாரிஸ் நகரில் நடந்த போராட்டத்தின் போது ஏற்பட்ட கலவரத்தின் நிலைமை கட்டுக்குள் வந்துள்ளதாக பிரான்ஸ் நாட்டின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-03-2019

    24-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-03-2019

    23-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • SuperWormMoon

    2019ம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்..: கண்களுக்கு விருந்தாக அமைந்த பூரண நிலவின் புகைப்படங்கள்

  • sharkpalne

    உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த 'ஷார்க் ப்ராபிட் ஹண்டர்' விமானம் தற்போது டெல்லியில் விஜயம்

  • iraqnewyear

    ஈராக்கில் தீப்பந்தங்களை ஏந்தி நியூரோஷ் புத்தாண்டை வரவேற்ற குர்தீஷ் மக்கள்: வாணவேடிக்கைகளுடன் உற்சாக கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்