SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி: இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

2018-12-10@ 10:50:36

அடிலெய்டு: ஆஸ்திரேலிய அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 250 ரன் குவித்து ஆல் அவுட்டானது. புஜாரா 123 ரன் விளாசி அசத்தினார். பின்னர் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 235 ரன்னுக்கு சுருண்டது. டிராவிஸ் ஹெட் அதிகபட்சமாக 72 ரன்கள் எடுத்தார். இதையடுத்து, 15 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்து. பொறுப்புடன் விளையாடிய புஜாரா (71), ரகானே (70) ஆகிய இருவரும் அரை சதம் அடித்தனர்.


புஜாரா - ரகானே ஜோடி 4வது விக்கெட்டுக்கு 87 ரன் சேர்த்தது. அடுத்து வந்த ரோகித் ஷர்மா 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதிரடியாக விளையாடிய ரிஷப் பன்ட் 28 ரன் (16 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினார். அஷ்வின் 5 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார்.  அடுத்து வந்த முகமது ஷமி, இஷாந்த் ஷர்மா டக்அவுட் வெளியேறியதால் இந்திய அணி அனைத்து விக்கெட்களையும்  இழந்து 106.5 ஓவரில் 307 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலியா பந்துவீச்சில் நாதன் லயன் அபாரமாகப் பந்துவீசி 42 ஓவரில் 7 மெய்டன் உட்பட 122 ரன் விட்டுக்கொடுத்து 6 விக்கெட் கைப்பற்றினார். ஸ்டார்க் 3, ஹேசல்வுட் 1 விக்கெட் வீழ்த்தினர்.


இதனைதொடர்ந்து, 323 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பிஞ்ச் 11 ரன் எடுத்து அஷ்வின் சுழலில் விக்கெட் கீப்பர் பண்ட் வசம் பிடிபட்டார். ஹாரிஸ் 26 ரன், கவாஜா 8 ரன்னில் பெவிலியன் திரும்பினர். ஹேண்ட்ஸ்கோம்ப் 14 ரன் எடுத்து ஷமி வேகத்தில் புஜாராவிடம் பிடிபட்டார். நான்காம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 104 ரன் எடுத்தது. இன்று 5-ம் நாள் ஆட்டம் தொடர்ந்து நடைபெற்றது. தொடக்கத்திலேயே டிராவிஸ் ஹெட் 14 ரன்களில் இஷாந்த் சர்மா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கேப்டன் டிம் பெயின் 41 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.


அந்த அணியின் ஷான் மார்ஷ் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். 166 பந்தில் 60 ரன்கள் எடுத்திருந்த போது பும்ரா பந்தில் அவர் ஆட்டமிழந்தார். பின்னர் மிட்சல் ஸ்டார்க் கம்மின்ஸ் ஜோடி 8-வது விக்கெட்டுக்கு 41 சேர்த்தது. மிட்சல் ஸ்டார்க் மற்றும் கம்மின்ஸ் இருவரும் தலா 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 291 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதனால் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் பும்ரா, ஷமி, அஸ்வின் தலா 3 விக்கெட்களை கைப்பற்றினர் இஷாந்த் சர்மா 1 விக்கெட் எடுத்தார். இந்த வெற்றியின் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 21-03-2019

  21-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • flood

  அமெரிக்காவின் அப்பர் மிட்வெஸ்ட் பகுதியில் வரலாறு காணாத வெள்ளம்: பல பகுதிகள் நீரில் மூழ்கிய புகைப்படங்கள்!

 • karnatakabuildingcollapse

  கர்நாடகாவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த 5 மாடி கட்டிடம் சரிந்தது: இதுவரை 3 பேர் பலியான சோகம்

 • texas

  டெக்சாஸ் அருகே ரசாயன கிடங்கில் பயங்கர தீ விபத்து: பல மைல் தூரத்திற்கு கரும்புகை சூழ்ந்தது!

 • camelrace

  எகிப்து நாட்டில் சிறுவர்களுக்கான ஒட்டக ஓட்டப்பந்தய திருவிழா: உற்சாகத்துடன் எண்ணற்ற சிறுவர்கள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்