SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சாலையோரங்களில் நிறுத்தப்பட்டிருந்த 7 ஆயிரம் வாகனங்கள் ரூ2.20 கோடிக்கு ஏலம்: மாநகராட்சி அதிகாரிகள் தகவல்

2018-12-10@ 01:15:40

சென்னை: சென்னையில் நீண்ட நாட்களாக சாலையோரங்களில் நிறுத்தப்பட்டிருந்த  7 ஆயிரம் வாகனங்கள் ரூ2.20 கோடிக்கு ஏலம் விடப்பட்டுள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக  மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:  சாலையோரங்களில் நீண்ட நாட்களாக பழுதடைந்து, போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்கள் காவல்துறை உதவியுடன் அப்புறப்படுத்தப்படும். அவ்வாறு 1 முதல் 5 வரையுள்ள மண்டலங்களில் (வடக்கு  வட்டாரம்)  அப்புறப்படுத்தப்பட்ட  2627  வாகனங்கள் சூளை, அவதான பாப்பையா தெருவில் உள்ள மலேரியா ஸ்டோர் அருகில் உள்ள  மாநகராட்சி இடத்திலும், 6 முதல் 10 வரையுள்ள மண்டலங்களில் (மத்திய வட்டாரம்) அப்புறப்படுத்தப்பட்ட  2924 வாகனங்கள் மேயர் சத்தியமூர்த்தி சாலையில் உள்ள மத்திய தார் கலவை நிலைய வளாகத்திலும், 11 முதல் 15 வரையுள்ள மண்டலங்களில் (தெற்கு வட்டாரம்) அப்புறப்படுத்தப்பட்ட 2324 வாகனங்கள் பள்ளிக்கரணை பழைய குப்பை கொட்டும் வளாகத்திலும் என மொத்தம் 7877 வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டன.

இந்த வாகனங்கள் எந்த வழக்குகளுடனும் சம்பந்தப்படவில்லை என்று காவல்துறையின் மூலம் சான்று அளிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து  இவ்வாகன விவரங்கள் மாநகராட்சி  இணையதளம் மற்றும் தினசரி நாளிதழ்களில் வெளியிடப்பட்டன். இதன்பிறகும் யாரும் உரிமை கோராத 7877 வானகங்கள் இ ெடண்டர் முறையில் ஏலம் விடப்பட்டன. இதன்படி மத்திய வட்டாரத்தில் இருந்த வாகனங்கள் ரூ91 லட்சத்திற்கும், வடக்கு வட்டாரத்தில் இருந்த வாகனங்கள் ரூ68 லட்சத்திற்கும்,  தெற்கு வட்டாரத்தில் இருந்த வாகனங்கள் ரூ61 லட்சத்திற்கும் ஏலத்தில் எடுக்கப்பட்டன. இந்த ஏலம் மூலம் சென்னை மாநகராட்சிக்கு ரூ2.20 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-01-2019

    20-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 19-01-2019

    19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • ChillaiKalanKashmir

    கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

  • bombblastcolombia

    கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • chinafiredrone

    மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்