SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆவடியை குப்பை இல்லாத நகரமாக்க தூய்மை பணிக்கு 163 புதிய வாகனம்: நகராட்சி ஆணையர் தகவல்

2018-12-10@ 01:14:56

சென்னை: சென்னை அடுத்த ஆவடி நகராட்சியில் 17 பசுமை உரக்குடில் மற்றும் 21 பூங்கா உரக்குடில்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த உரக்குடில்களில் நகராட்சியில் சேகரிக்கப்படும் மக்கும் குப்பைகள் உரமாக தயாரிக்கப்பட்டு அதை விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் இலவசமாக விநியோகம் செய்யப்படுகிறது. இந்த உரக்குடில்களை செங்கல்பட்டு மண்டல நிர்வாக இயக்குனர் இளங்கோவன் நேற்று முன்தினம் ஆய்வு செய்தார். அப்போது நகராட்சி ஆணையர் ஜோதிகுமார், பொறியாளர் வைத்திலிங்கம், உதவி பொறியாளர் சங்கர், சுதாகர் ஆய்வாளர் ஜாபர் ஆகியோர் உடனிருந்தனர்.

இதுகுறித்து கமிஷனர் ஜோதிகுமார் கூறுகையில், ‘‘நகராட்சி பகுதியில் முழுமையாக துப்புரவு பணிகள் நடைபெறுவதற்காக 27 ஆட்டோக்கள், 136 பேட்டரி வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் மூலம் அனைத்து வீடுகளிலும், குப்பைகள் சேகரிக்கப்பட்டு ஆவடி நகரம் குப்பையில்லா நகரமாக மாற்ற உடனே நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இரவு நேரங்களில் ஆவடி மார்க்கெட், பேருந்து நிலையங்களில் குப்பை கழிவுகள் அகற்றப்பட்டு வருகிறது’’என்றார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-03-2019

    22-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • NerthikkadanTriplecane

    பங்குனி உத்திரப்பெருவிழா: திருவல்லிக்கேணி முருகன் கோயிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்

  • TokyoOlympicTorch

    2020 ஒலிம்பிக் போட்டிக்கு தீவிரமாக தயாராகி வரும் டோக்கியோ..: புதிய ஒலிம்பிக் ஜோதி கோப்பை அறிமுகம்

  • newzealandattack

    நியூசிலாந்து மசூதி துப்பாக்கிச் சூடு : உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டது

  • PhilipinesWhalePlastic

    இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்