SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருவொற்றியூர் 6வது வார்டு சார்லஸ் நகரில் கால்வாயில் தேங்கி நிற்கும் கழிவுநீர்

2018-12-10@ 01:14:17

* கண்டுகொள்ளாத அதிகாரிகள்
* போராட்டம் நடத்த மக்கள் முடிவு
திருவொற்றியூர்: திருவொற்றியூர் 6வது வார்டு சார்லஸ் நகரில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு, பாதாள சாக்கடை வசதி இல்லை. இதனால் வீடுகளில் கீழ்நிலை தொட்டி அமைத்து கழிவு நீரை தேக்கி பின்னர் லாரிகளின் மூலம் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. இப்பகுதி மக்கள் குளிப்பது, துணி துவைப்பது ஆகிய அன்றாடம் பயன்படுத்தக்கூடிய கழிவு நீர் தெருவில் அமைக்கப்பட்டுள்ள திறந்தவெளி கால்வாயில் விடப்படுகிறது.
இந்த திறந்தவெளி கால்வாயை மாநகராட்சி அதிகாரிகள் சரியாக பராமரிப்பதில்லை. இதனால், பல இடங்களில் அடைப்பு ஏற்பட்டு சேறும், சகதியுமாக உள்ளது. கழிவுநீர் சீராக செல்லாமல் கால்வாயில் தொடர்ந்து தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுவதோடு கொசுக்கள் அதிகமாக சுற்றுவட்டார மக்கள் தூங்க முடியாத நிலை உள்ளது. மேலும் கொசுக்களால் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது.

பல குறுகிய தெருக்களில் கால்வாய் திறந்தே கிடப்பதால் அவ்வழியாக சைக்கிளில் செல்லும் சிறுவர்கள் கால்வாயில் விழுந்து, காயமடைகின்றனர். இந்த கால்வாயை தூர்வாரி சீரமைத்திட வேண்டும் என்று திருவொற்றியூர் மண்டல அதிகாரிகளுக்கு பொதுமக்கள் பலமுறை புகார் கொடுத்தும் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘திருவொற்றியூர் நகராட்சியாக இருந்த போது இந்த கால்வாய்கள் துப்புரவு பணியாளர்கள் மூலம் முறையாக பராமரிக்கப்பட்டது. ஆனால் தற்போது கால்வாய்களை பராமரிக்காமல் கிடப்பில் விட்டதால் கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது. எனவே உடனடியாக இந்த கால்வாய்களை சீரமைக்க வேண்டும். இல்லையென்றால் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு மாநகராட்சிக்கு எதிராக போராட்டம் நடத்துவோம்’’ என்றனர்.     


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-01-2019

    20-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 19-01-2019

    19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • ChillaiKalanKashmir

    கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

  • bombblastcolombia

    கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • chinafiredrone

    மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்