SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வீட்டின் முன்பாக நிறுத்தியிருந்த ஆட்டோ, பைக் எரிந்து நாசம்: போலீசார் விசாரணை

2018-12-10@ 01:13:19

சென்னை: சென்னை கொரட்டூர், வீட்டுவசதி வாரிய குடியிருப்பு 47வது தெருவை சேர்ந்தவர் செந்தில் (47). ஆட்டோ ஓட்டி வருகிறார். நேற்று முன்தினம் சவாரி முடிந்து, செந்தில் தனது ஆட்டோவை இரவு வீட்டு முன்பு சாலையோரம் நிறுத்தி வைத்திருந்தார். நேற்று அதிகாலை 4 மணியளவில், வீட்டுக்கு வெளியில் சத்தம் கேட்டது. செந்தில் எழுந்து வந்து பார்த்தபோது ஆட்டோ மற்றும் அதன் அருகே நிறுத்தியிருந்த பைக் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த செந்தில் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைத்தார். ஆனால், அதற்குள் இரு வாகனங்களும் தீயில் முழுமையாக, எரிந்து சேதமானது. புகாரின் பேரில் கொரட்டூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையில் போலீசார் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ மற்றும் பைக்கை யாராவது எரித்தார்களா? ஆட்டோவில் இருந்த காஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டதா? என விசாரித்து வருகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bji

    முன்னாள் சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டாவை பாஜக செயல் தலைவராக அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு

  • suvami

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பிரம்மோற்சவ விழா 5ம் நாளான இன்று சுவாமி நாச்சியார் வீதி உலா

  • mango

    கிருஷ்ணகிரியில் 27வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி: மலர்கள் கொண்டு உலக கோப்பை வடிவமைப்பு

  • earth

    சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சக்தி வாழ்ந்த நிலநடுக்கம்: 12 பேர் உயிரிழப்பு,125 பேர் படுகாயம்

  • airshow

    பாரிசில் நடைபெற்ற 53 வது சர்வதேச விமான கண்காட்சி: போயிங் போன்ற பல்வேறு விமானங்கள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்