SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மயிலாப்பூரில் அருகருகே இயங்கும் 3 டாஸ்மாக் கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

2018-12-10@ 01:12:45

சென்னை: சென்னையில் 801 டாஸ்மாக் கடைகள் செயல்படுகிறது. இந்த கடைகளுடன் ஒட்டிய 500க்கும் மேற்பட்ட பார்களும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், மயிலாப்பூரில் அடுக்குமாடி குடியிருப்பு போன்று 3 டாஸ்மாக் கடைகளும் அதனுடன் இணைந்து பார்களும் ஒரே இடத்தில் இயங்கி வருகிறது. இக்கட்டிடத்தில் பார் நடத்தும் உரிமையாளர் போலியாக கணக்கு காட்டி சட்ட விரோதமாக 2 பார்களுக்கு அனுமதி பெறாமல் நடத்தி வருவதாகவும், இவரால் அரசுக்கு மாதம் தோறும் ரூ20 லட்சம் நஷ்டம் ஏற்படுவதாகவும், கண்டுகொள்ளாமல் இருக்க போலீசாருக்கு உரிய கவனிப்பு செய்யப்படுவதாகவும், அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். மேலும், மயிலாப்பூர் பல்லக்குமா நகரின் முக்கிய பகுதியில் உள்ள இந்த கடையினால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். ஆனால், இந்த கடையை மூட எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுகுறித்த செய்தி சமீபத்தில் தினகரன் நாளிதழில் வெளியானது. இந்நிலையில் டாஸ்மாக் அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக இங்குள்ள டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது பார் நடத்துவதற்கான உரிமத்தொகையை சம்பந்தப்பட்ட பார் உரிமையாளர் முறையாக கட்டியுள்ளாரா? ஒரே கட்டிடத்தில் மூன்று கடைகள் இருப்பதால் அதில் உள்ள சுகாதார வசதி, பார்களில் உள்ள பாதுகாப்புகள் குறித்து ஆய்வு நடத்தினர்.

ஆய்வு குறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறியதாவது: கடைகளில் உள்ள பார்களுக்கு முறையாக உரிமம் செலுத்தப்படவில்லை. மறைமுகமாக 2 பார்கள் நடைபெறுவதாகவும், குடிமகன்களால் அப்பகுதி பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் தொடர் புகாரும், செய்தியும் வெளியானது. இந்த புகாரை அடுத்து குடிமகன்களால் பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் சீட் அமைத்து பாரை நடத்த வேண்டும். பொதுமக்களிடம் தொடர்புகார்கள் வராத வகையில் முறைப்படுத்தி பார் மற்றும் டாஸ்மாக் கடயை நடத்த வேண்டும். இல்லையேல் கடை மற்றும் பாரினை மூடிவிட்டு செல்லுங்கள் என்று எச்சரிக்கை விடுத்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர். இதேபோல், அதிகாரிகளின் ஆய்வினை தொடர்ந்து மைலாப்பூர் தொகுதி எம்எல்ஏ நட்ராஜ் இந்த கடை மற்றும் பாரினை பார்வையிட்டு, அப்பகுதி பொதுமக்களிடம் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். 


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • modi1

    ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே உடன் சந்திப்பு

  • dr

    மியான்மரில் போதைப்பொருள் தடுப்பு தினத்தை முன்னிட்டு 747 கோடி மதிப்பிலான போதை பொருள்கள் தீ வைத்து அழிப்பு

  • hongkong

    சீனாவுக்கு நாடுகடத்தி விசாரிக்கும் மசோதாவை எதிர்த்து ஹாங்காங்கில் 1000க்கும் மேற்பட்டோர் போராட்டம்

  • jappan

    ஜப்பானில் நெற்பயிரில் உள்ள பூச்சிகளை அழிப்பதற்காக புதிய ரோபோ கண்டுபிடிப்பு

  • fire

    அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் வனப்பகுதியில் மூன்று நாட்களாக காட்டுத் தீ

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்