SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருவொற்றியூர் தொகுதியில் 25 ஆயிரம் போலி வாக்காளர்கள்: தேர்தல் அதிகாரியிடம் திமுக புகார்

2018-12-10@ 00:59:17

சென்னை: திருவொற்றியூர் தொகுதியில், 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலி வாக்காளர்கள் உள்ளதாக தேர்தல் அதிகாரியிடம் திமுக புகார் செய்து கருத்து கேட்பு கூட்டத்தை புறக்கணித்தனர். சென்னை திருவொற்றியூர் தொகுதிக்குட்பட்ட வாக்காளர் பட்டியலில் உள்ள குறைபாடுகள் குறித்த கருத்துக்கேட்பு கூட்டம், திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது. தேர்தல் நடத்தும் அலுவலர் மோகன் தலைமை வகித்தார். இதில் திமுக, அதிமுக உள்பட அனைத்து கட்சி பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பங்கேற்ற திருவொற்றியூர் கிழக்கு பகுதி திமுக செயலாளர் தனியரசு எழுந்து, ‘‘வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள், விலாசம் மாற்றி சென்றவர்கள் பெயர்கள் பதிவாகியுள்ளது.

மேலும் நந்தி ஓடை, மஸ்தான் கோயில் தெரு, நேதாஜி நகர் போன்ற பகுதிகளில் வீடுகள் இல்லாமல் காலியாக உள்ள இடத்தில் கூட வாக்காளர் இருப்பதாக வாக்காளர் பட்டியலில் பெயர் பதிவாகியுள்ளது. இதுபோன்ற குளறுபடிகளால் திருவொற்றியூர் தொகுதியில் மட்டும் சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலி வாக்காளர்கள் பெயர்கள் பட்டியலில் உள்ளது.  இதுகுறித்து பலமுறை புகார் தெரிவித்தும் தேர்தல் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இந்த கருத்து கேட்பு கூட்டம் பயனற்றது என்று கூறி, தனியரசு மற்றும் திமுக நிர்வாகிகள் அனைவரும் கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-01-2019

    20-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 19-01-2019

    19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • ChillaiKalanKashmir

    கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

  • bombblastcolombia

    கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • chinafiredrone

    மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்