SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வழிப்பறி செய்ததை தடுத்ததால் ஆத்திரம் கத்தியைக்காட்டி போலீசாரை மிரட்டிய கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கைது: தரமணியில் பரபரப்பு

2018-12-10@ 00:57:45

வேளச்சேரி: தரமணி காவல் நிலைய ஏட்டு ஆண்டவர் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தரமணி பகுதியில் 2 வாலிபர்கள், உணவு டெலிவரி செய்யும் தனியார் நிறுவன ஊழியரை சுற்றிவளைத்து கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றனர். இதை பார்த்ததும் ஏட்டு ஆண்டவரும், போலீசாரும் விரட்டிச்சென்று வாலிபர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் போதையில் இருந்த வாலிபர்கள், ‘‘எங்களை பிடித்தால் கத்தியால் குத்திவிடுவோம்’’ என்று மிரட்டிவிட்டு தப்பிக்க முயன்றனர். ஆனால் போலீசார் சாதுர்யமாக செயல்பட்டு 2 பேரையும் மடக்கி பிடித்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். விசாரணையில் தரமணி எம்ஜிஆர் நகரை சேர்ந்த கல்லூரி மாணவர் அஜித் (20),  அன்பழகன் தெருவை சேர்ந்த விக்னேஷ் (21) என்று தெரியவந்தது. அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-03-2019

    24-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-03-2019

    23-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • SuperWormMoon

    2019ம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்..: கண்களுக்கு விருந்தாக அமைந்த பூரண நிலவின் புகைப்படங்கள்

  • sharkpalne

    உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த 'ஷார்க் ப்ராபிட் ஹண்டர்' விமானம் தற்போது டெல்லியில் விஜயம்

  • iraqnewyear

    ஈராக்கில் தீப்பந்தங்களை ஏந்தி நியூரோஷ் புத்தாண்டை வரவேற்ற குர்தீஷ் மக்கள்: வாணவேடிக்கைகளுடன் உற்சாக கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்