SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தங்கதமிழ்ச்செல்வன் தகவல் அதிமுகவுடன் அமமுக இணைய வேண்டும் என பா.ஜ எதிர்பார்ப்பு

2018-12-10@ 00:42:13

நெல்லை:  நெல்லையில் அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்ச்செல்வன் நேற்று அளித்த பேட்டி: அமமுக, அதிமுக இணைப்பு குறித்து  பல்வேறு தரப்பினரும் பேசி வருகின்றனர். அதிமுக தனியாக தேர்தலை எதிர் கொண்டால் தோல்வியை சந்திக்கும் என பாஜ நினைக்கிறது. காங்கிரஸ், திமுக கூட்டணி தமிழகத்தில்  வலுவாக இருப்பதால் அதை எதிர்ப்பதற்கு அமமுக, அதிமுகவோடு இணைய வேண்டும் என பாஜ எதிர்பார்க்கிறது.அதிமுக, அமமுக இணைந்தால் அது வரவேற்கத்தக்கதுதான். ஆனால் அதற்கு முன்பாக தமிழக முதல்வர் மற்றும் ஊழல் அமைச்சர்களை மாற்ற வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை.அமமுகவை பொறுத்தவரை மதசார்பற்ற கட்சிகளை ஆதரிக்கிறது. நாங்கள் பாஜகவை தொடர்ந்து எதிர்த்து வருகிறோம். 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுக மட்டும் வெற்றி பெற்றால் நாங்கள் அவர்களோடு  இணைந்து விடுகிறோம். ஆனால் இடைத்தேர்தல் நடக்குமா என்பதே தெரியவில்லை. மத்திய அரசை எதிர்த்து கேள்வி கேட்க தமிழக அரசுக்கு துணிவில்லை. தமிழகத்திற்கு திட்டங்களை கேட்டு முதல்வர் டெல்லி செல்வதாக தெரியவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

‘யாரையும் நம்பி அதிமுக இல்லை’
நாகர்கோவிலில் நேற்று, தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுகவும், டி.டி.வி. தினகரனும் இணைந்தால்தான் தி.மு.க.வை எதிர்கொள்ள முடியும் என தங்கதமிழ்  செல்வன் கூறி இருப்பது, அவரது சொந்த கருத்தாகவே பார்க்கிறேன். அதிமுக வலிமையாக உள்ளது. எனவே யாரையும் நம்பி அதிமுக இல்லை. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் வந்து இணையலாம் என அழைப்பு விடுத்துள்ளனர். அவர்களின் அறிவிப்புபடி வந்து சேருபவர்களை  அதிமுக அரவணைக்க தயாராக உள்ளது.  இவ்வாறு அவர் கூறினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-01-2019

    20-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 19-01-2019

    19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • ChillaiKalanKashmir

    கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

  • bombblastcolombia

    கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • chinafiredrone

    மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்