SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜன.1ம் தேதிக்கு பிறகு பிளாஸ்டிக் இருந்தால் பார் உரிமம் ரத்து: டாஸ்மாக் உயர் அதிகாரி தகவல்

2018-12-10@ 00:29:44

சென்னை: விதிகளை மீறி ஜனவரி 1ம் தேதிக்கு பிறகு பிளாஸ்டிக் பயன்படுத்தினால் பார் உரிமம் ரத்து செய்யப்படும், என டாஸ்மாக் உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். தமிழகம் முழுவதும் 2019 ஜனவரி 1ம் தேதி முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி, டாஸ்மாக் கடை மற்றும் பார்களில் பிளாஸ்டிக் கப், பை, வாட்டர்  பாக்கெட், வாட்டர் பாட்டில் உள்ளிட்ட பிளாஸ்டிக் சம்பந்தப்பட்ட பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என அனைத்து மாவட்டங்களிலும் உள்ள டாஸ்மாக் பார் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதேபோல், மாசுகட்டுப்பாட்டு அதிகாரிகளும் பார் உரிமையாளர்களிடம் பார்களில் எதை பயன்படுத்த வேண்டும், எதை பயன்படுத்த கூடாது என்று எடுத்துரைத்தனர். அதன்படி, வரும் ஜனவரி 1ம் தேதி முதல் டாஸ்மாக் பார்களில்  பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் பார் உரிமம் ரத்து செய்யப்படும், என டாஸ்மாக் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:  தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் ஜனவரி 1ம் தேதி முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிப்பது குறித்த ஒரு சுற்றறிக்கையை ஏற்கனவே அனுப்பிவிட்டோம்.  அதன்படி மாவட்ட மேலாளர்களிடம் பிளாஸ்டிக் பைகளுக்கு பதில் ‘ஜூட் பேக்’ வாங்கி கடைகளில் வைத்துக் கொள்ளுங்கள் என்றும் கூறிவிட்டோம். இதேபோல், ‘ஜூட் பேக்’ என்ன விலையில் வாங்கப்படுகிறதோ அதே விலையை மதுபாட்டிலின் மேல் கூடுதலாக வைத்து விற்பனை செய்துகொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, ஒரு ஜூட் பேக் ₹2  கொடுத்து வாங்கப்பட்டால் அதை வாடிக்கையாளர்களிடமே வாங்கிகொள்ளலாம். மேலும், டாஸ்மாக் கடைகளை பொறுத்தவரை பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது ஜூட் பேக்குகளை தான் பயன்படுத்த வேண்டும் என  கண்டிப்புடன் கூறியுள்ளோம். ஒருசில பார் உரிமையாளர்கள் கண்ணாடி டம்ளர்களை பயன்படுத்த முன்வந்துள்ளனர். பலர் சில்வர் டம்ளர்களை பயன்படுத்த முன்வந்துள்ளனர். எனவே, தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடை மற்றும் பார்களில் ஜனவரி 1ம் தேதி முதல் பிளாஸ்டிக் தடை கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும். விதிமுறைகளை மீறி பார்களில் பிளாஸ்டிக் பயன்படுத்தினால்  சம்பந்தப்பட்ட பார்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டும். அதற்கு பிறகும் உத்தரவை பின்பற்றவில்லை என்றால் பார் உரிமத்தை ரத்துசெய்துவிடுவோம்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-01-2019

    20-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 19-01-2019

    19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • ChillaiKalanKashmir

    கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

  • bombblastcolombia

    கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • chinafiredrone

    மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்