SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாடாளுமன்ற தேர்தலை நெருங்கும் நிலையில் புதிய வாக்காளர்களை சந்திக்கும் பாஜவினர்: வீடு, வீடாக சென்று மத்திய அரசின் திட்டங்களை விளக்குகின்றனர்

2018-12-10@ 00:25:44

சென்னை: நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கும் வகையில் புதிய வாக்காளர்களை சந்தித்து பாஜவினர் பேசி வருகின்றனர். வீடு, வீடாக சென்று மத்திய அரசின் திட்டங்களையும் அவர்கள் விளக்கி வருகின்றனர். இந்தியாவில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பாஜ, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இப்போதே தயாராகி வருகின்றனர். மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பாஜ தலைவர்கள் மாநிலம், மாநிலமாக சென்று பிரசாரம் செய்ய தொடங்கியுள்ளனர். அதே நேரத்தில் பாஜவை வீழ்த்தும் வகையில் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டு வருகின்றனர். இந்த நிலையில் தேர்தலை சந்திக்கும் வகையில் வீடு, வீடாக சென்று மக்களை சந்திக்க வேண்டும் என்று பாஜ தலைமை உத்தரவிட்டுள்ளது. மேலும் பழைய நிர்வாகிகளை சந்தித்து பேச வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பாஜவினர் மக்களை சந்திக்க தொடங்கியுள்ளனர்.

சென்னையில் ஆயிரம் விளக்கு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று பாஜ இளைஞர் அணி தலைவர் வினோஜ் பி.செல்வம் தலைமையில் இளைஞர் அணியினர் மக்களை சந்தித்து பேசினர். இதில் ஏராளமான பாஜவினர் கலந்து கொண்டனர்.இது குறித்து பாஜ இளைஞர் அணி தலைவர் வினோஜ் பி.செல்வம் கூறுகையில், “நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கும் வகையில் பழைய நிர்வாகிகளை சந்தித்து பேச வேண்டும். முக்கிய நிர்வாகிகளை சந்தித்து பேச வேண்டும், புதிய வாக்காளர்களை சந்தித்து பேசி அவர்களை பாஜவிற்கு வாக்களிக்க இழுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் பேரில் வீடு, வீடாக சென்று மக்களை சந்தித்து வருகிறோம். புதிய வாக்காளர்களிடம் மத்திய அரசு கடந்த நான்கரை ஆண்டில் செய்துள்ள பல்வேறு நலத்திட்ட உதவிகள் எடுத்துரைக்கப்பட்டு வருகிறது. 15 நாட்கள் மக்களை சந்திக்க திட்டமிட்டு அதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது. அதாவது வருகிற 21ம் தேதி வரை மாநிலம் முழுவதும் பாஜவினர் மக்களை சந்திக்க உள்ளனர்” என்றார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-01-2019

    20-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 19-01-2019

    19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • ChillaiKalanKashmir

    கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

  • bombblastcolombia

    கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • chinafiredrone

    மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்