SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காங்கிரஸ்-திமுக கூட்டணி மக்களுக்காக செயலாற்றும்: திமுக டிவிட்டரில் கருத்து

2018-12-10@ 00:22:23

சென்னை: காங்கிரஸ்-திமுக கூட்டணி எப்போதும் நாட்டின் ஒற்றுமையை பலப்படுத்தும் நோக்கில், மக்களுக்காக தொடர்ந்து செயலாற்றும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: ஒரே நோக்கம் கொண்ட கொள்கைகள் எப்பொழுதும் அர்த்தமுள்ள விவாதங்களையும், அதன் மூலம் நல்ல பலன்களுக்குமே வழிவகுக்கும். காங்கிரஸ்-திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி எப்போதும் நாட்டின் ஒற்றுமையை பலப்படுத்தும் நோக்கில், மக்களுக்காக தொடர்ந்து செயலாற்றும். 2018ம் ஆண்டிற்கான சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் விருது பெறும் கனிமொழிக்கு இதயம் நிறைந்த வாழ்த்துகள். திமுக எம்பிக்கள் அனைவரும் ஜனநாயக கடமையில் சிறப்பாக செயல்படுவார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டு இந்த விருது! அவர் மென்மேலும் பல விருதுகள் பெற வாழ்த்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 27-06-2019

    27-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • mo

    அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு

  • 4l

    ஓரின சேர்க்கை உரிமைகள் இயக்கத்திற்கான 50 வது ஆண்டு விழா கொண்டாட்டம்

  • c1

    ஈராக் போரில் துணிச்சலுடன் செயல்பட்ட வீரருக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் பதக்கம் வழங்கினார்

  • b

    இடம்பெயருதலை தடுக்க அமெரிக்கா,மெக்ஸிகோ இடையிலான எல்லையில் 15,000 தேசிய பாதுகாப்பு படையினர் குவிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்