SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கடலில் வீணாக கலக்கும் நீரை சேமிக்கவே மேகதாது அணை: கர்நாடக அமைச்சர் புது விளக்கம்

2018-12-10@ 00:20:12

சென்னை: கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை சேமிக்கவே மேகதாது அணை கட்டப்படுவதாக கர்நாடக அமைச்சர் சென்னையில் பேட்டியளித்துள்ளார்.கர்நாடக மாநில நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார், நேற்று காலை 10.15 மணிக்கு சென்னையில் இருந்து பெங்களுருவுக்கு விமானத்தில் புறப்பட்டு சென்றார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மேகதாது அணை திட்டம் தமிழகத்துக்கு பயனளிக்கும் திட்டமாகும். தமிழக எல்லைக்கு அருகே சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்தில்தான் இந்த அணை கட்டப்பட உள்ளது. தமிழக அரசு விரும்பினால் அணை கட்டும்  பகுதியை நேரில் வந்து பார்வையிடலாம். தற்போது அணை கட்டுவதற்கான வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அணை கட்டும் விவகாரத்தில் தமிழக முதல்வரும், மக்களும் ஒத்துழைக்க வேண்டும். கடலில் வீணாக  கலக்கும் தண்ணீரை சேமிக்கவே அணை கட்டுகிறோம்.

மேகதாது அருகே கட்டப்பட உள்ள புதிய அணையில் தேக்கி வைக்கப்படும் நீரை கர்நாடகாவில் விவசாயத்துக்கு பயன்படுத்த முடியாது. இதுசம்பந்தமாக தமிழக  முதல்வருக்கு விளக்கமாக கடிதம் அனுப்பி இருக்கிறோம். அதற்கு இதுவரை முதல்வரிடம் இருந்தோ, தமிழக அரசிடம் இருந்தோ எந்த பதிலும் வரவில்லை. எங்களுடைய சகோதரர்கள் தமிழ்நாட்டிலும் உள்ளனர். அவசரப்பட்டு  அணை கட்டும் பணியை தொடங்கவில்லை.உபரிநீர் வீணாக கடலில் கலக்காமல் இருக்க சேமிப்பதே எங்களது நோக்கம். எங்களை பொறுத்தவரை அண்டை மாநிலங்களுடன் சண்டை போடுவது நோக்கமல்ல. மேகதாதுவில் அணை கட்டுவதன் மூலம் இரு மாநிலங்களுமே பயன்பெற முடியும். மத்திய நீர் ஆணையம் மற்றும் அனைத்து துறைகளின் அனுமதிகளையும் முறையாக பெற்ற பின்னரே அணை கட்டுவோம். அணை கட்டினால் கர்நாடகத்தைவிட தமிழகத்துக்குதான் அதிக பயன் கிடைக்கும். தமிழகத்தில் அரசியல் கட்சியினர் அணை கட்டுவதை தடுக்கும் நோக்கத்தில் இருப்பது வருத்தத்தை அளிக்கிறது. இவ்வாறு சிவகுமார் கூறினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Trump_japan11

    அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஜப்பான் பயணம் : ஜப்பான் பிரதமருடன் கோல்ஃப் விளையாடி அசத்தல்

  • kashmir_kola11

    தீவிரவாதி ஜாகீர் முசா கொல்லப்பட்டதன் எதிரொலி : காஷ்மீரில் வன்முறை வெடிப்பு; ஊரடங்கு உத்தரவு அமல்

  • 20aacident_died11

    சூரத்தில் கல்வி பயிற்சி மையத்தில் பயங்கர தீ விபத்து: 20 பேர் பரிதாப பலி

  • 27-05-2019

    27-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 26-05-2019

    26-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்