SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சத்தியமூர்த்தி பவனில் சோனியா பிறந்த நாள் விழா: ஏழை, எளியோருக்கு நல உதவிகள் வழங்கப்பட்டது

2018-12-10@ 00:20:06

சென்னை: சோனியா காந்தி பிறந்த நாள் விழா சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் சார்பில் கேக் வெட்டி கொண்டாட்டப்பட்டது.தமிழக காங்கிரஸ் சார்பில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் 72 பிறந்த நாள் விழா சத்தியமூர்த்தி பவனில் நேற்று கொண்டாடப்பட்டது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரிஅனந்தன் தலைமை தாங்கி பிறந்த  நாள் கேக் வெட்டி ெதாண்டர்கள், பொதுமக்களுக்கு வழங்கினார்.

மேலும் ஏழை, எளியோர்க்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.விழாவில் காங்கிரஸ் துணை தலைவர் தாமோதரன், பொதுச் செயலாளர்கள் சிரஞ்சீவி, தணிகாச்சலம், முன்னாள் எம்எல்ஏ யசோதா, மாவட்ட தலைவர்கள் அரும்பாக்கம் வீரபாண்டியன், சிவ ராஜசேகரன், அணித்தலைவர்கள்  ஜான்சி ராணி, செல்வப்பெருந்தகை, பி.வி.தமிழ்செல்வன், தீனா, பிராங்களின் பிரகாஷ், மயிலை தரணி, திருவான்மியூர் மனோகரன், எஸ்.கந்தராஜ் உள்ளிட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.  அதைத்தொடர்ந்து குமரி அனந்தன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், , ‘‘2019 நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று, ராகுல் காந்தி பிரதமராவதற்கு சோனியா காந்தியின் பிறந்த நாளில் உறுதியேற்போம். ராகுல்  காந்தி நிச்சயம் பிரதமராக வருவார், நல்லாட்சி தருவார்’’ என்றார். இதே போல தமிழகம் முழுவதும் காங்கிரஸ் சார்பில் சோனியா காந்தி பிறந்தநாள் பல்வேறு நல உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-03-2019

    22-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • NerthikkadanTriplecane

    பங்குனி உத்திரப்பெருவிழா: திருவல்லிக்கேணி முருகன் கோயிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன்

  • TokyoOlympicTorch

    2020 ஒலிம்பிக் போட்டிக்கு தீவிரமாக தயாராகி வரும் டோக்கியோ..: புதிய ஒலிம்பிக் ஜோதி கோப்பை அறிமுகம்

  • newzealandattack

    நியூசிலாந்து மசூதி துப்பாக்கிச் சூடு : உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டது

  • PhilipinesWhalePlastic

    இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள்: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்