SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வலுவடையும் காற்றழுத்தம் 2 நாளில் புயலாக மாறும்

2018-12-10@ 00:11:56

சென்னை: வங்கக் கடலில் தென் கிழக்கு பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி வலுவடையும் பட்சத்தில் அது புயலாக மாறும். அது 13ம் தேதிக்கு  மேல் நாகபட்டினம் அருகே கரை கடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. வங்கக் கடலில் தென் கிழக்கு பகுதியில் அந்தமான், இலங்கை இடையே உருவான காற்றழுத்தம் வலுவடைந்து தற்போது காற்றழுத்த தாழ்வு நிலையாக மா றியுள்ளது. இதுமேலும் வலுவடைய வாய்ப்புள்ளது.
அரபிக் கடல் பகுதியில் நிலவும் காற்றின் ேபாக்கு வட கிழக்கு பருவமழைக்கு சாதகமாக உள்ளது. அத்துடன், தமிழகத்தில் நிலவும் வறண்ட வானிலை, வெப்ப நிலை உயர்வாக இருப்பதாலும் அந்த காற்றழுத்த தாழ்வு நிலை  புயலாக மாறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அது புயலாக மாறினால், அந்த புயலுக்கு ‘ஃபதாய்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் 13ம் தேதிக்கு பிறகு வடக்கு மற்றும் வட மேற்கு திசையில் நகர்ந்து தமிழக கடலோரப் பகுதிக்கு வரும். அதற்குபிறகு சென்னை, தெற்கு ஆந்திரா இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், 13ம் தேதிக்கு பிறகு தமிழகம், புதுச்சேரி கடலோரப் பகுதியில் மழை பெய்யத் தொடங்கும். திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், நாமக்கல், சேலம், கரூர், ஈரோடு, திருப்பூர், ே காவை, நீலகிரி  மாவட்டங்களில் கடுமையான கனமழையும் பெய்யும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bji

    முன்னாள் சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டாவை பாஜக செயல் தலைவராக அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு

  • suvami

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பிரம்மோற்சவ விழா 5ம் நாளான இன்று சுவாமி நாச்சியார் வீதி உலா

  • mango

    கிருஷ்ணகிரியில் 27வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி: மலர்கள் கொண்டு உலக கோப்பை வடிவமைப்பு

  • earth

    சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சக்தி வாழ்ந்த நிலநடுக்கம்: 12 பேர் உயிரிழப்பு,125 பேர் படுகாயம்

  • airshow

    பாரிசில் நடைபெற்ற 53 வது சர்வதேச விமான கண்காட்சி: போயிங் போன்ற பல்வேறு விமானங்கள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்