SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காஷ்மீரில் 18 மணி நேர துப்பாக்கி சண்டை 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை: பாதுகாப்பு படையினர் மீது கல்வீச்சு

2018-12-10@ 00:09:54

ஸ்ரீநகர்: காஷ்மீரில் 18 மணி நேரம் நடந்த துப்பாக்கி சண்டையில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதற்கு கண்டனம் தெரிவித்து, அப்பகுதி இளைஞர்கள் பாதுகாப்பு படையினர் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு நிலவியது. காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகர்-பந்திபோரா சாலையில் முஜ்கந்த் பகுதியில் பாதுகாப்பு படையினரும், போலீசாரும் நேற்று முன்தினம் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள், பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்தனர். பதிலுக்கு பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்டனர். சுமார் 18 மணி நேரம் நீடித்த துப்பாக்கி சண்டையில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்கள் எந்த அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது உறுதி செய்யப்படவில்லை. அவர்கள் தங்கியிருந்த பகுதியில் இருந்து வெடிபொருட்கள், ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

இதற்கிடையே, பாதுகாப்பு படையினரின் துப்பாக்கி சூட்டை கண்டித்து, அப்பகுதி இளைஞர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். பாதுகாப்பு படையினர் மீது கற்களை வீசி தாக்கினர். போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசி இளைஞர்களை விரட்டினர். இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் மொபைல் இன்டர்நெட் சேவை தற்காலிகமாக துண்டிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள வெடிபொருட்களை முழுமையாக அப்புறப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென பாதுகாப்பு படையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • annauniv

    அண்ணா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆவணப்படங்கள் விழா: கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு

  • jammukashmir

    ஜம்மு-காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கியவர்களை கண்டுபிடிக்க தொடரும் மீட்புப்பணிகள்: 7 சடலங்கள் மீட்பு!

  • TulipflowerDay

    நெதர்லாந்தில் தேசிய துலிப் மலர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது

  • womesrally

    வுமென்ஸ் மார்ச் 2019: உலகின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் ஒன்று திரண்டு பேரணி

  • turkeycamelfight

    2,000 ஆண்டுகளாக நடந்து வரும் பாரம்பரிய ஒட்டகச் சண்டை: துருக்கியில் கோலாகலத்துடன் ஆரம்பம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்