உலக கோப்பை ஹாக்கி: கால் இறுதியில் இந்தியா
2018-12-09@ 02:29:59

புவனேஸ்வர் : உலக கோப்பை ஆண்கள் ஹாக்கி போட்டித் தொடரின் கால் இறுதியில் விளையாட இந்திய அணி நேரடியாகத் தகுதி பெற்றது. சி பிரிவில் இடம் பெற்றிருந்த இந்திய அணி, முதல் லீக் ஆட்டத்தில் தென் ஆப்ரிக்காவை 5-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. அடுத்து பெல்ஜியத்துக்கு எதிராக 2-2 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது. இந்த நிலையில், தனது கடைசி லீக் ஆட்டத்தில் கனடா அணியுடன் நேற்று மோதிய இந்தியா 5-1 என அபாரமாக வென்று மொத்தம் 7 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்ததுடன், கால் இறுதிக்கு நேரடியாக முன்னேறியது. ஹர்மான்பிரீத் 2, சிங்லென்சனா, லலித், அமித் தலா 1 கோல் போட்டனர். கனடா சார்பில் புளோரிஸ் வான் சன் ஆறுதல் கோல் போட்டார். முன்னதாக, தென் ஆப்ரிக்காவை 5-1 என வீழ்த்திய பெல்ஜியம் அணி (7 புள்ளி) கோல் வித்தியாச அடிப்படையில் 2வது இடம் பிடித்ததால் கிராஸ் ஓவர் சுற்றில் விளையாட வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டது. 3வது இடம் பிடித்த கனடா அணியும் (1 புள்ளி) கிராஸ் ஓவர் சுற்றில் விளையாடும் நிலையில், தென் ஆப்ரிக்கா (1) வெளியேற்றப்பட்டது.
மேலும் செய்திகள்
லாரெஸ் விருது விழா 2019: இந்தியாவை சேர்ந்த யுவா விளையாட்டு அமைப்பிற்கு நல்லெண்ண விருது
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுமா? : வரும் 27ம் தேதி நடைபெறும் ஐசிசி கூட்டத்தில் முடிவு
6 பேர் டக் அவுட் வெறும் 24 ரன்னில் சுருண்டது ஒமான்
மீண்டும் பந்துவீசலாம் தனஞ்ஜெயாவுக்கு ஐசிசி அனுமதி
முதல் ஒருநாள் போட்டியில் இன்று வெஸ்ட் இண்டீசுடன் இங்கிலாந்து மோதல்
ஜோகோவிச்சுக்கு லாரியஸ் விருது
கனடாவில் உள்ள வீட்டில் பயங்கர தீவிபத்து: ஒரே குடும்பத்தை சேர்நத 7 குழந்தைகள் பலி
ட்ரோன்களைப் பறக்கவிட்டு வித்தியாசமான லாந்தர்ன் விளக்குத் திருவிழா: சீனாவில் நடைபெற்றது
ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் விழா கொண்டாட்டம்: லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்பு
கும்பமேளாவில் மகி பூர்ணிமா கோலாகலம் : கங்கைக்கு திரண்டு வந்து புனித நீராடிய பக்தர்கள்
பெங்களூருவில் ஆசியாவின் மிகப்பெரிய ஏர் ஷோ: ரஃபேல் உள்ளிட்ட கண்கவர் விமானங்கள் சாகசம்