SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

போராட்டம் நடத்திய காங்கிரஸ் மாணவர் அமைப்பினர் மீது தடியடி : பத்திரிகையாளர் உட்பட 3 பேர் படுகாயம்

2018-12-09@ 02:10:25

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் தலைமை செயலகம் முன் போராட்டம் நடத்திய காங்கிரஸ் மாணவர் அமைப்பினர் மீது போலீசார் நடத்திய தடியடியில் ஒரு பத்திரிகையாளர்  உட்பட 3 பேர் காயமடைந்தனர். சபரிமலையில் போலீஸ் தடை உத்தரவு உட்பட  கெடுபிடிகளை நீக்க ேகாரி கடந்த ஒரு வாரமாக காங்கிரஸ் கூட்டணியை சேர்ந்த  எம்எல்ஏக்கள் சட்டசபை முன் தொடர் சத்யாகிரக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டத்தை  முடிவிற்கு கொண்டுவர கோரி காங்கிரஸ் மாணவர் அமைப்பினர் நேற்று திருவனந்தபுரத்தில்  தலைமை செயலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து போலீசார்  குவிக்கப்பட்டனர். தலைமை செயலகம் முன் போலீசார் தடுப்பு அரண்களை  அமைத்திருந்தனர். அதை தாண்டி செல்ல போரட்டக்காரர்கள் முயன்றனர். இதையடுத்து இருவருக்கும் இடையே  தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து செல்ல முயன்றனர். அப்ேபாது திடீர் என்று எந்த காரணமும்  இன்றி போலீசார்அவர்கள் மீது தடியடி நடத்தினர். இதில் ஒரு பத்திரிகையாளர் உட்பட 3 பேர் படுகாயமடைந்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • CanadaSyrianChildren

    கனடாவில் உள்ள வீட்டில் பயங்கர தீவிபத்து: ஒரே குடும்பத்தை சேர்நத 7 குழந்தைகள் பலி

  • DroneLanternChina

    ட்ரோன்களைப் பறக்கவிட்டு வித்தியாசமான லாந்தர்ன் விளக்குத் திருவிழா: சீனாவில் நடைபெற்றது

  • AttukalPongalaKerala

    ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் விழா கொண்டாட்டம்: லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்பு

  • mahipoornima

    கும்பமேளாவில் மகி பூர்ணிமா கோலாகலம் : கங்கைக்கு திரண்டு வந்து புனித நீராடிய பக்தர்கள்

  • AeroShowBangalore19

    பெங்களூருவில் ஆசியாவின் மிகப்பெரிய ஏர் ஷோ: ரஃபேல் உள்ளிட்ட கண்கவர் விமானங்கள் சாகசம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்