SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

செவ்வாய் கிரகத்தில் மர்ம ஒலி

2018-12-09@ 02:08:31

வாஷிங்டன்: அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, ‘இன்சைட்’ என்ற விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பியுள்ளது. செவ்வாய் கிரகத்தில் அதிர்வுகள், வெப்ப பரிமாற்றங்கள், நிலப்பரப்பின் அமைப்பு போன்றவற்றை ஆராய்வதற்காக இந்த விண்கலம் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த மே 5ம் தேதி ஏவப்பட்ட இந்த விண்கலம் சுமார் 485 மில்லியன் கிமீ தூரத்தை கடந்து செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப் பாதைக்குள் நுழைந்துள்ளது. கடந்த மாதம் 26ம் தேதி செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இந்நிலையில், செவ்வாய் கிரகத்தில் வித்தியாசமான ஒலி கேட்டதாக நாசா மையம் தெரிவித்துள்ளது.

காற்றின் அதிர்வலைகளை இன்சைட் விண்கலம் ஒலியாக பதிவு செய்துள்ளது. அந்த கிரகத்தின் வடமேற்கில் இருந்து தென்கிழக்கு நோக்கி, 10 முதல் 25 எம்பிஎச் வேகத்தில் இந்த அதிர்வலை பதிவாகியுள்ளது.  இது, மிக சாதாரணமான ஒலி இல்லை என்று நாசா ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • malar_modi12

    2வது முறையாக பிரதமராகும் நரேந்திர மோடி ; கட்சித் தலைவர்கள் மோடிக்கு மலர் கொத்துக்களுடன் வாழ்த்து

  • peruearthqq1

    பெரு நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவுகோலில் சுமார் 8 ஆக பதிவு

  • Trump_japan11

    அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஜப்பான் பயணம் : ஜப்பான் பிரதமருடன் கோல்ஃப் விளையாடி அசத்தல்

  • kashmir_kola11

    தீவிரவாதி ஜாகீர் முசா கொல்லப்பட்டதன் எதிரொலி : காஷ்மீரில் வன்முறை வெடிப்பு; ஊரடங்கு உத்தரவு அமல்

  • 20aacident_died11

    சூரத்தில் கல்வி பயிற்சி மையத்தில் பயங்கர தீ விபத்து: 20 பேர் பரிதாப பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்