SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரேசிலில் 2 வங்கி கொள்ளை முறியடிப்பு கொள்ளையர், போலீசார் இடையே மோதல் 6 பிணைக்கைதிகள் உள்பட 12 பேர் பலி

2018-12-09@ 02:07:31

ரியோடி ஜெனிரோ: பிரேசிலில் வங்கி கொள்ளை சம்பவத்தின்போது கொள்ளையர்கள் மற்றும் போலீசார் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 6 பிணைக்கைதிகள் உள்பட 12 பேர் பலியாகினர். வன்முறை அதிகம் நடக்கும் நாடுகளில் பிரேசில் ஒன்று. இங்கு கடந்த ஆண்டில் மட்டும் வன்முறை சம்பவங்களால் 64,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 12 பேர் கொல்லப்பட்டனர். இந்த நாட்டின் மிலாக்ரேஷ் நகரில் ஒரே தெருவில் உள்ள 2 வங்கிகளில் கொள்ளையடிப்பதற்காக பயங்கர ஆயுதங்களுடன் கொள்ளையர்கள் சிலர் நேற்று அங்கு வந்தனர். அதிகாலை 2 மணிக்கு வங்கிகளில் கொள்ளையடிக்க திட்டமிட்ட அவர்கள் அந்த தெருவில் ஒரு லாரியை நடுரோட்டில் நிறுத்தினர். அப்போது சாபோலோவில் இருந்து விமானத்தில் திரும்பிய பயணிகள் காரில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். அவர்களை கொள்ளையர்கள் பிணையக்கைதிகளாக பிடித்து வைத்துக்கொண்டு வங்கியில் கொள்ளையடிக்க சென்றனர்.

இதுபற்றி அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் வங்கி கொள்ளையில் ஈடுபட முயன்ற கொள்ளையர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதனால் அதிர்ச்சியடைந்த கொள்ளையர்கள் தாங்கள் பிடித்து வைத்திருந்த பிணையக்கைதிகள் 6 பேரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். இதில் 2 குழந்தைகள் உள்பட 5 பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். இதையடுத்து போலீசார் கொள்ளையர்கள் 6 பேரை சுட்டுக்கொலை செய்தனர். 2 கொள்ளையர்களை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.சில கொள்ளையர்கள் தப்பியோடினர். இதனால் கொள்ளை முயற்சி தடுக்கப்பட்டது. மேலும் கொள்ளையர்கள் பயன்படுத்திய 3 வாகனங்கள் மற்றும் வெடிமருந்து ஆயுதங்கள் ஆகியவை சம்பவ இடத்தில் இருந்துபறிமுதல் செய்யப்பட்டது. அதிகாலையில் நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ChongqingCycleRace

    சீனாவில் நடைபெற்ற குழந்தைகளுக்கான சைக்கிள் போட்டி: பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது

  • BrazilBarMassacre

    பிரேசில் மதுபான விடுதியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு..: 6 பெண்கள் உள்பட 11 பேர் பலியான பரிதாபம்!

  • 21-05-2019

    21-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • russiabicycle

    ரஷ்யாவில் களைகட்டிய பிரம்மாண்ட சைக்கிள் திருவிழா: சுமார் 47,000 பேர் பங்கேற்பு

  • canadaplastic

    கனடாவில் பிளாஸ்டிக்கை ஒழிக்க விழிப்புணர்வு கண்காட்சி: கடலில் வீசப்பட்ட பொருட்களை வைத்து கடல்வாழ் உயிரினங்கள் வடிவமைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்