SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குண்டு; ஒல்லி உடம்பு வசுந்தராவுக்கு வருத்தம் தெரிவித்தார் சரத்யாதவ்

2018-12-09@ 02:06:47

ராஞ்சி: ஐக்கிய ஜனதா தள கட்சியின் முன்னாள் தலைவர் சரத் யாதவ். இவர் தற்போது லோக்தந்திரிக் ஜனதா தளம் என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில் சமீபத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்று பேசிய சரத் யாதவ், `முதல்வர் வசுந்தரா ராஜே தற்போது குண்டாகி விட்டார். அவர் முன்பு ஒல்லியாக இருந்தார். அவருக்கு ஓய்வு கொடுங்கள்’ என பேசினார்.

அவருடைய இந்த பேச்சுக்கு வசுந்தரா கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும், ‘அனுபவம் வாய்ந்த தலைவர் ஒருவரிடம் இருந்து இத்தகைய கருத்தை நான் எதிர்பார்க்கவில்லை. இது என்னை அவமானப்படுத்தியதாக மட்டுமின்றி, பெண் இனத்தையே அவமானப்படுத்தியதாக கருதுகிறேன்’ என்று அவர் தெரிவித்தார். இந்நிலையில், தனது கருத்துக்கு சரத் யாதவ் நேற்று வருத்தம் தெரிவித்தார். ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நேற்று அவர் அளித்த பேட்டியில், ‘‘வசுந்தரா ராஜேயுடன் நீண்ட காலமாக நட்புடன் இருந்து வருகிறேன். எனது கருத்து அவரை புண்படுத்தி இருந்தால் அதற்கான வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

  • libya_sandai11

    தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

  • thuppaki-12jk

    13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

  • hurricane_12

    அமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்