SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாதவரம் பஸ் நிலையத்தில் கை நரம்பை அறுத்து மாணவி தற்கொலை முயற்சி

2018-12-09@ 02:00:35

சென்னை: ஆந்திர மாநிலம் நெல்லூர் பாலக்கோடு பகுதியை சேர்ந்த கீதாமாதுரி (20), பூந்தமல்லியில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் 2ம் ஆண்டு படிக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன் கீதாமாதுரிக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதால், அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். தகவலறிந்து வந்த அவரது பெற்றோர், நேற்று முன்தினம் மாலை, கீதாமாதுரியை ஆந்திராவிற்கு அழைத்து செல்ல முடிவு செய்தனர். இதற்காக, மாதவரத்தில் உள்ள புறநகர் பஸ் நிலையத்துக்கு அவரை அழைத்து வந்தனர். அங்கு, கழிப்பறை சென்று வருவதாக கூறிச்சென்ற கீதாமாதுரி வெகுநேரமாகியும் வரவில்லை.சந்தேகமடைந்த பெற்றோர், கழிப்பறைக்கு சென்று பார்த்தபோது, கை நரம்பை அறுத்து கொண்ட கீதாமாதுரி, ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடியதை பார்த்து கதறி அழுதனர். சத்தம் கேட்டு திரண்ட பொதுமக்கள், மாணவியை மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. புகாரின்பேரில் மாதவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கல்லூரியில் ஏதாவது பிரச்னை காரணமாக மாணவி தற்கொலைக்கு முயன்றாரா, காதல் விவகாரமா என விசாரிக்கின்றனர்.

* பல்லாவரம் வார சந்தை நடக்கும்  இடத்தில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பொதுமக்களிடம் செல்போன் பறித்த ஆந்திர  மாநிலம் விஜயநகர் பகுதியை சேர்ந்த நரேந்திரா (23), அவரது உறவினரான ஒடிசா  மாநிலத்தை சேர்ந்த ராமு (30) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்கள்,  ஆந்திராவில் இருந்து ரயிலில் சென்னைக்கு வந்து பொதுமக்கள் அதிகம் கூடும்  இடங்களில் கைவரிசை காட்டிவிட்டு, மீண்டும் ஆந்திராவிற்கு தப்பி செல்வதும்  தெரிந்தது.
* பல்லாவரம், பம்மல் சுற்று வட்டாரப்  பகுதிகளில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்டு வந்த பெருங்குடி கல்லுக்குட்டையை  சேர்ந்த  துளசிராம் (22), மற்றும் ெபாழிச்சலூரை சேர்ந்த 17 வயது சிறுவர்கள்  2 பேரை போலீசார் கைது செய்தனர்.
* பெரம்பூர், திருவிக நகர் பகுதிகளில்  கடைகளை உடைத்து கொள்ளையடித்து வந்த புளியந்தோப்பு ராஜா கார்டனை சேர்ந்த  அந்தோணிகுமார் (32), பழைய வண்ணாரப்பேட்டை சிமிட்ரி சாலையை சேர்ந்த சுகுமார்  (28) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
* மதுரவாயல் அய்யாவு நகரை சேர்ந்த கவிதா  (38) என்பவர், தனது வீட்டின் அருகே நடந்து சென்றபோது, பைக்கில் வந்த 2  மர்ம நபர்கள், அவர் கழுத்தில் கிடந்த 10 சவரன் செயினை பறித்து சென்றனர்.
* ராயபுரம் பி.சி பிரஸ்ரோடு பகுதியை  சேர்ந்த நூர்தீன் (30) நேற்று முன்தினம் குடும்பத்துடன் கோவையில் இருந்து  சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்ட்ரல் நிலையம் வந்தார். அப்போது, 30 சவரன்  நகைகள் வைத்திருந்த அவரது மனைவியின் கைப்பையை மர்ம நபர்கள் அபேஸ் செய்தனர்.  புகாரின் பேரில் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.
* திருவல்லிக்கேணி பகுதியில் கஞ்சா  விற்பனை செய்து வந்த திருவல்லிக்கேணி, அவுலியா சாகிப், 4வது தெருவை சேர்ந்த  ஆசிப், (25) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
* கீழ்ப்பாக்கத்தை  சேர்ந்த அமுதா (65) என்பவர் நேற்று தனது பேத்தி ஹர்ஷவர்தினியுடன்  சேத்துப்பட்டு ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, ரயில்  மோதி இறந்தார். படுகாயமடைந்த சிறுமிக்கு கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்படுகிறது.
* துரைப்பாக்கம் கண்ணகி நகரை சேர்ந்த சரஸ்வதி (44) தனது மருமகனுடன் நேற்று பைக்கில் ராஜாஜி சாலை ஜிடி கோர்ட் அருகே சென்றபோது மாநகர பஸ் மோதி இறந்தார்.
*  புதுவண்ணாரப்பேட்டை நாகூரான் தோட்டத்தை சேர்ந்த டிப்ளமோ மாணவன் பாலாஜி  (18), நேற்று பாரிமுனை என்எஸ்சி போஸ் சாலையில் பைக்கில் சென்றபோது, மாநகர  பஸ் மோதி இறந்தார்.
* சேத்துப்பட்டு அப்பாராவ் கார்டன் முதல் தெருவில் பான்மசாலா மற்றும் வெளிநாட்டு சிகரெட்களை பதுக்கி விற்ற மணிப்பூரை சேர்ந்த தரனா வாரா (46), வார்ஷங் (27), பரிதோஷ் தாஸ் (27), கோடோஜி மோமின் (22) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

சிறுமி மீட்பு

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 17 வயது  சிறுமி, சென்னையில் வீட்டு வேலை செய்து வந்துள்ளார். பணிச்சுமை காரணமாக  வேலை செய்த வீட்டில் இருந்து நேற்று முன்தினம் ஓடி வந்த சிறுமி, சொந்த ஊருக்கு செல்ல வழி தெரியாமல் மயிலாப்பூர் ரயில் நிலையத்தில் தத்தளித்தார். ரயில்வே போலீசார், அந்த சிறுமியை மீட்டு சென்னை பார்க் டவுனில் உள்ள  குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். சிறுமியின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏரியில் மூழ்கி மாணவர்கள் பலி

செங்கல்பட்டு அடுத்த திருமணி பாரதபுரத்தை சேர்ந்த மோகன்ராஜ் மகன் இம்ரான் (15), கிருஷ்ணன் மகன் சத்யா (12). அரசு பள்ளி மாணவர்கள். இவர்கள் உள்ளிட்ட 7 சிறுவர்கள் நேற்று அங்குள்ள ஏரியில் குளித்தபோது, இம்ரான் மற்றும் சத்தியா நீரில் மூழ்கி இறந்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • mexicovalcano

  மெக்ஸிகோவில் எரிமலை வெடித்ததில் 8 ஆயிரம் அடி உயரத்திற்கு புகை மண்டலம் : பொதுமக்கள் வெளியேற்றம்

 • modipuja

  உத்தர பிரதேசத்தில் கும்பமேளா நடக்கவுள்ள நதிகரையில் பிரதமர் மோடி பூஜை செய்து வழிபாடு

 • animalsmuggling

  இந்தோனேசியா துறைமுகத்தில் சட்டவிரோதமாக கடத்த முயன்ற பல்வேறு உயிரினங்கள் மீட்பு

 • swimminggeneva

  ஜெனீவாவில் கிறித்துமஸ் தினத்தை முன்னிட்டு நீச்சல் போட்டி : நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு

 • Cairoegyptopen

  மம்மிகளின் உலகமான எகிப்தில் 4400 ஆண்டு பழமை வாய்ந்த பிரமீடு கெய்ரோவில் திறக்கப்பட்டது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்