SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைக்காத அதிகாரிகளை கண்டித்து திமுகவினர் போராட்டம் : பூந்தமல்லியில் பரபரப்பு

2018-12-09@ 01:59:22

பூந்தமல்லி: பூந்தமல்லி தொகுதி அதிமுக எம்எல்ஏ தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கு இடைத்தேர்தலுக்கான பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அனைத்து கட்சி சார்பில் தேர்தல் முகவர்களுக்கான கூட்டம் நேற்று பூந்தமல்லியில் நடைபெற்றது. இதில், அதிமுக மற்றும் பாஜ உள்ளிட்ட கட்சிகளுக்கு மட்டும் அதிகாரிகள் அழைப்பு விடுத்ததாகவும், திமுகவிற்கு அழைப்பு விடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து கூட்டத்தில் அதிமுக மற்றும் பாஜவினர் மட்டும் கலந்து கொண்டனர். இதை கண்டித்து திமுக மாவட்ட செயலாளர் ஆவடி நாசர் தலைமையில், பூந்தமல்லி ஒன்றிய செயலாளர்  ஜெயக்குமார்,  நகர செயலாளர் ரவிக்குமார், ஜெரால்டு, காயத்ரி தர், ஆர்.ஜெயசீலன், டி.தேசிங்கு, புஜ்ஜி ராமகிருஷ்ணன், ஜீ.சுதாகர் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட திமுகவினர் பூந்தமல்லி தேர்தல் துணை தாசில்தாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அதிகாரிகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மேலும் சாலை மறியல் செய்ய முயன்ற திமுகவினரிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. வரும் திங்கட்கிழமை  கட்சிகளின் முகவர்கள் கூட்டம் நடக்கும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து திமுகவினர் கலைந்து சென்றனர். இதுகுறித்து திமுகவினர் கூறுகையில், ‘‘இந்த கூட்டம் நடத்த வேண்டும் என்று மாவட்ட கலெக்டரிம் நாங்கள் தான் மனு கொடுத்தோம். ஆனால் எங்களுக்கு அழைப்பு கொடுக்காமல் இந்த கூட்டத்தை நடத்துகின்றனர். எங்களையும் அழைத்தால்தான் வார்டு பகுதிகளில் வாக்காளர்கள் அதிகம் உள்ளதா? குறைவாக உள்ளதா? இறந்தவர் பெயர்கள் உள்ளதா? என்பது தெரியவரும். அனைத்துக் கட்சி கூட்டம் என்று கூறிவிட்டு அதிமுக, பாஜகவை மட்டும் அழைத்துள்ளனர். தேர்தல் பணியில் ஆரம்ப நிலையிலேயே அதிகாரிகள் ஒருதலைப்பட்சமாக செயல்படத் தொடங்கியுள்ளது கண்டிக்கத்தக்கது’’ என்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • CanadaSyrianChildren

    கனடாவில் உள்ள வீட்டில் பயங்கர தீவிபத்து: ஒரே குடும்பத்தை சேர்நத 7 குழந்தைகள் பலி

  • DroneLanternChina

    ட்ரோன்களைப் பறக்கவிட்டு வித்தியாசமான லாந்தர்ன் விளக்குத் திருவிழா: சீனாவில் நடைபெற்றது

  • AttukalPongalaKerala

    ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் விழா கொண்டாட்டம்: லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்பு

  • mahipoornima

    கும்பமேளாவில் மகி பூர்ணிமா கோலாகலம் : கங்கைக்கு திரண்டு வந்து புனித நீராடிய பக்தர்கள்

  • AeroShowBangalore19

    பெங்களூருவில் ஆசியாவின் மிகப்பெரிய ஏர் ஷோ: ரஃபேல் உள்ளிட்ட கண்கவர் விமானங்கள் சாகசம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்