சைக்கிள் வழங்கும் விழாவில் அதிமுகவினர் கோஷ்டி மோதல்
2018-12-09@ 01:55:20

ஆலந்தூர்: நங்கநல்லூர், ஆலந்தூர், மூவரசன்பட்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா, நங்கநல்லூரில் உள்ள நேரு அரசினர் பள்ளியில் நேற்று நடந்தது. ஆலந்தூர் தொகுதி எம்எல்ஏ தா.மோ.அன்பரசன், மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் 10.30 மணிக்கு விழா மேடைக்கு வந்தனர். ஆனால், 11 மணி வரை நாடாளுமன்ற உறுப்பினர் கே.என்.ராமச்சந்திரன் வராததால், தா.மோ.அன்பரசன், ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் இலவச சைக்கிள்களை மாணவர்களுக்கு வழங்கிவிட்டு சென்றனர். இதையடுத்து, 12 மணிக்கு எம்.பி கே.என்.ராமச்சந்திரன், முன்னாள் எம்.பி. சிட்லப்பாக்கம் ராஜேந்திரன், முன்னாள் எம்எல்ஏ வி.என்.பி.வெங்கட்ராமன் ஆகியோர் பள்ளிக்கு வந்து, சில மாணவர்களுக்கு சைக்கிள்களை வழங்கினர்.
இரு நிகழ்ச்சியிலும், மாவட்ட கல்வி அலுவலர் தாமோதரன், பள்ளி தலைமை ஆசிரியர் திருநாவுக்கரசு, பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் பரணிபிரசாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில், தங்களது பெயரை வாசிக்காமல் புறக்கணிப்பதாக அதிமுகவின் ஒரு தரப்பினர் பள்ளி வளாகத்திலேயே தகராறில் ஈடுபட்டதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. நிர்வாகிகள் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் அங்கு அரை மணிநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் செய்திகள்
நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி அதிமுகவுக்கு விஜயகாந்த் கெடு
திமுக கூட்டணியில் தமிழகம், புதுச்சேரியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள்: பிற தோழமை கட்சிகளுடன் ஓரிரு நாளில் ஒப்பந்தம் என மு.க.ஸ்டாலின் தகவல்
நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு
அதிமுக தேர்தல் கூட்டணி கொள்கை ரீதியில் அமைக்கப்படவில்லை: தம்பிதுரை
அதிமுகவுடன் தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தையா ? : தமிழ் மாநில காங்கிரஸ் மறுப்பு
ஆட்சியை காப்பாற்றவே பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது அதிமுக: ஸ்டாலின் சாடல்
கனடாவில் உள்ள வீட்டில் பயங்கர தீவிபத்து: ஒரே குடும்பத்தை சேர்நத 7 குழந்தைகள் பலி
ட்ரோன்களைப் பறக்கவிட்டு வித்தியாசமான லாந்தர்ன் விளக்குத் திருவிழா: சீனாவில் நடைபெற்றது
ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் விழா கொண்டாட்டம்: லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்பு
கும்பமேளாவில் மகி பூர்ணிமா கோலாகலம் : கங்கைக்கு திரண்டு வந்து புனித நீராடிய பக்தர்கள்
பெங்களூருவில் ஆசியாவின் மிகப்பெரிய ஏர் ஷோ: ரஃபேல் உள்ளிட்ட கண்கவர் விமானங்கள் சாகசம்