SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஏரிக்கரையில் மாடு மேய்த்த மூதாட்டி அடித்து கொலை : நகைகளுடன் தப்பிய ஆசாமிகளுக்கு வலை

2018-12-09@ 01:54:02

சென்னை: காஞ்சிபுரம் அடுத்த முசரவாக்கம் விநாயகபுரம் பகுதியை சேர்ந்தவர் கன்னியப்பன் (65). இவரது மனைவி பார்வதி அம்மாள் (60). மாடுகளை வளர்த்து, பால் வியாபாரம் செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் மாலை திருப்புட்குழி ஏரிக்கரை பகுதியில் தனது மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றுள்ளார். ஆனால், இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. சந்தேகடைந்த அவரின் மகள் ரேணுகா, ஏரிக்கரை பகுதிக்கு சென்று பார்த்தபோது, மாடுகள் மட்டும் கட்டி வைக்கப்பட்டிருந்தது. பார்வதி அம்மாளை காணவில்லை. தகவலறிந்து, ஊர் பொதுமக்கள் ஏரிக்கரைக்கு விரைந்து வந்து பல இடங்களில் தேடினர்.

அப்போது, அங்குள்ள முட்புதரில் காதில் ரத்தம் வடிந்த நிலையில் பார்வதி அம்மாள் இறந்து கிடந்தார். அவர் அணிந்திருந்த கம்மல் மற்றும் 5 பவுன் செயின் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. தகவலறிந்து வந்த பாலுசெட்டிச்சத்திரம் போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மோப்ப நாய் அஜய் வரவழைக்கப்பட்டது. அது சிறிதுதூரம் ஓடி நின்றுவிட்டது. திருப்புட்குழி ஏரியில் செயல்பட்டு வரும் செங்கல் சூளையில் வடமாநில இளைஞர்கள் வேலை செய்து வருகின்றனர். மூதாட்டி அணிந்திருந்த நகைக்காக வடமாநில இளைஞர்கள் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டனரா என போலீசார் விசாரிக்கின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ChennaiMarinaMaasiMagam

    மாசி மகத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியின் புகைப்படங்கள்

  • AlbinoTurtleheart

    உடலின் வெளிப்புறத்தில் இதயத்துடன் பிறந்துள்ள அபூர்வ வெள்ளை ஆமை: ஆச்சரியத்தில் ஆராய்ச்சியாளர்கள்!

  • ModiSalmanDelhi

    சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் இந்தியா வருகை...நேரில் சென்று வரவேற்ற பிரதமர் மோடி: புகைப்படங்கள்

  • SuperSnowMoon2k19

    அதிக ஒளியுடனும், பூமிக்கு மிக அருகிலும் தெரிந்த சூப்பர் மூன்: ரம்மியமான அரிய நிகழ்வை கண்டு ரசித்த மக்கள்!

  • 20-02-2019

    20-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்