SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

6 கிராமங்கள் நீரில் மூழ்கும் என எச்சரிக்கை மேகதாது அணைக்கு கர்நாடக அதிகாரிகள் எதிர்ப்பு

2018-12-09@ 01:51:52

பெங்களூரு: ‘மேகதாதுவில் தடுப்பணை கட்டுவதால் 6 கிராமங்கள், 5 ஆயிரம் ஹெக்டேர்  நிலம் மற்றும் யானைகள் சரணாலயம் அழியும் நிலை ஏற்படும்’ என கர்நாடக அரசை மாநில உயரதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதற்கான திட்ட வரைவுக்கு மத்திய நீர்வளத்துறை அனுமதி அளித்தது. மேலும், திட்ட அறிக்கையை அனுப்பும்படி கர்நாடக அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. அதன் பேரில், கர்நாடக நீர்வளத் துறை அமைச்சர் டி.கே.சிவகுமார் தலைமையில் அமைச்சர்கள், வேளாண் துறை, நீர்வளத் துறை, வனத்துறை மற்றும் பொதுப்பணித் துறைகளை ேசர்ந்த உயரதிகாரிகள் அடங்கிய குழு, மேகதாதுவில் தடுப்பணை கட்டுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை நேற்று முன்தினம் ஆய்வு செய்தது.

சிவகுமார் அளித்த பேட்டியில், ‘மேகதாதுவில் தடுப்பணை கட்ட அரசு 6 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்கிறது. மேலும், விவசாய நிலங்கள், பொதுப்பணித் துறை க்கு சொந்தமான நிலம், வனப்பகுதிகளில் உள்ள நிலம் என மொத்தம் 5 ஆயிரம் ஏக்கர் நிலத்தை அணை கட்ட பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது’ என்றார். இந்த தடுப்பணையை கட்டுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கர்நாடக அரசு உயரதிகாரிகள், மாநில அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். ‘தடுப்பணை கட்டுவதால் 6 கிராமங்கள் நீரில் மூழ்கும் அபாயம் இருப்பதால், அந்த கிராம மக்களை வெளியேற்ற வேண்டும்.  இதேபோல், 660 ஹெக்டேர் விளை நிலம் உட்பட ெமாத்தம் 5 ஆயிரம் ஹெக்டேர் வனநிலம் அழியும். வனப்பகுதியில் உள்ள யானைகள், வன விலங்குகளின் சரணாலயங்களில் தண்ணீர் புகும் அபாயம் ஏற்படும்’ என அரசிடம் எச்சரித்துள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • lisbon_tramp11

    லிஸ்பனில் டிராம் ரயில் தடம் புரண்டு விபத்து : 28 பேர் காயம்

  • 15-12-2018

    15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • AmazonIllegalMining

    அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

  • chinasnowfall

    கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

  • hungary_policepadhuga11

    புதிய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்தியதை கண்டித்து ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்