SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கருத்து கணிப்பில் நானே பெரியவன் மபி.யில் 4வது முறையாக பா.ஜ ஆட்சி அமைக்கும் : முதல்வர் சிவராஜ் சிங் நம்பிக்கை

2018-12-09@ 01:50:51

ததியா: மத்தியப் பிரதேசம் தேர்தலில் பா.ஜ வெற்றி பெற்று 4வது முறையாக ஆட்சி அமைக்கும் என முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ராஜஸ்தான், தெலங்கானா, மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர் மற்றும் மிசோரம் மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தல்களின் கருத்து கணிப்பு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டன. அதில்,  மத்தியப் பிரதேசத்தில் பா.ஜ-காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவும் கூறப்பட்டுள்ளது..

டைம்ஸ் நவ்-சிஎன்எக்ஸ் வெளியிட்ட கருத்து கணிப்பில் மொத்தம் உள்ள 230 தொகுதிகளில் பா.ஜ.வுக்கு 126 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 86 இடங்களும் கிடைக்கும் என கூறியது. இந்தியா டுடே-ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்து கணிப்பில் பா.ஜ.வுக்கு  102 இடங்கள் முதல் 120 இடங்கள் கிடைக்கலாம். காங்கிர்சு்க்கு 104 முதல் 122 வரை கிடைக்கலாம் என கூறியது.
இந்நிலையில், இம்மாநிலத்தை ஆளும் பாஜ முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ததியா என்ற இடத்தில் உள்ள பீதாம்பரா கோயிலுக்கு தரிசனம் செய்ய நேற்று சென்றார். அப்போது, கருத்து கணிப்பு முடிவுகள் பற்றி அவரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது: மத்தியப் பிரதேச மக்களுடன் நான் எப்போதும் இணைந்து இருப்பதால், நான்தான் மிகப் பெரிய சர்வேயர். அனைத்து தரப்பு மக்களின் ஆசி எங்களுக்கு உள்ளது. தேர்தலில் நாங்கள்தான் வெற்றி பெற போகிறோம். இந்த முறை 200 இடங்களுக்கு அதிகமாக நாங்கள் வெற்றி பெறுவோம். இங்கு பா.ஜ மீண்டும் ஆட்சி அமைக்கும். மத்தியப் பிரதேசத்தின் நலனுக்காக பீதாம்பராவிடம் ஆசி பெற நான் இங்கு வந்துள்ளேன்’’ என்றார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • malar_modi12

    2வது முறையாக பிரதமராகும் நரேந்திர மோடி ; கட்சித் தலைவர்கள் மோடிக்கு மலர் கொத்துக்களுடன் வாழ்த்து

  • peruearthqq1

    பெரு நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவுகோலில் சுமார் 8 ஆக பதிவு

  • Trump_japan11

    அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஜப்பான் பயணம் : ஜப்பான் பிரதமருடன் கோல்ஃப் விளையாடி அசத்தல்

  • kashmir_kola11

    தீவிரவாதி ஜாகீர் முசா கொல்லப்பட்டதன் எதிரொலி : காஷ்மீரில் வன்முறை வெடிப்பு; ஊரடங்கு உத்தரவு அமல்

  • 20aacident_died11

    சூரத்தில் கல்வி பயிற்சி மையத்தில் பயங்கர தீ விபத்து: 20 பேர் பரிதாப பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்