SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சபரிமலை செல்ல முயன்றபோது கைதான பாஜ பொதுச்செயலர் ஜாமீனில் விடுதலை

2018-12-09@ 01:48:54

திருவனந்தபுரம்: சபரிமலை செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்ட பா.ஜ., பொதுச்செயலாளர் சுரேந்திரன் நேற்று சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். கேரள மாநில பா.ஜ. பொதுச்செயலாளரான சுரேந்திரன், கடந்த மாதம் 18ம் தேதி இருமுடிக்கட்டுடன் சபரிமலை சென்றார். அவரை நிலக்கல்லில் போலீசார் தடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தனர்.

அவர் திருவனந்தபுரம்  சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு கேரள உயர் நீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியது. இதையடுத்து, நேற்று காலை அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். பா.ஜ., மாநில தலைவர் தரன்பிள்ளை, எம்பி முரளீதரன் தலைமையில் நூற்றுக்கணக்கான பா.ஜ. தொண்டர்கள் அவரை வரவேற்று அழைத்துச் சென்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ChennaiMarinaMaasiMagam

    மாசி மகத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியின் புகைப்படங்கள்

  • AlbinoTurtleheart

    உடலின் வெளிப்புறத்தில் இதயத்துடன் பிறந்துள்ள அபூர்வ வெள்ளை ஆமை: ஆச்சரியத்தில் ஆராய்ச்சியாளர்கள்!

  • ModiSalmanDelhi

    சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் இந்தியா வருகை...நேரில் சென்று வரவேற்ற பிரதமர் மோடி: புகைப்படங்கள்

  • SuperSnowMoon2k19

    அதிக ஒளியுடனும், பூமிக்கு மிக அருகிலும் தெரிந்த சூப்பர் மூன்: ரம்மியமான அரிய நிகழ்வை கண்டு ரசித்த மக்கள்!

  • 20-02-2019

    20-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்