SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பணி நிறைவு சான்றிதழ் பெற்ற பிறகு அடுக்கு குடியிருப்பு வாங்கினால் ஜிஎஸ்டி கட்டத் தேவையில்லை : மத்திய அரசு அறிவிப்பு

2018-12-09@ 01:48:05

புதுடெல்லி: ‘அடுக்குமாடி குடியிருப்புகளை (பிளாட்) விற்பனை செய்யும்போது சம்பந்தப்பட்ட துறையிடம் இருந்து பணி நிறைவு சான்றிதழ் பெறப்பட்டிருந்தால், அந்த வீடுகளை வாங்குபவர்கள் ஜிஎஸ்டி வரி கட்டத் தேவையில்லை’ என மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.  இது தொடர்பாக மத்திய நிதித்துறை அமைச்சகம் நேற்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கட்டி முடிக்கப்பட்ட வீடுகள், கட்டிடங்கள், வணிக வளாகங்களை வாங்குவோருக்கு, அந்த நேரத்தில் கட்டிடத்துக்கு சம்பந்தப்பட்ட துறையிடம் இருந்து பணி நிறைவு சான்றிதழ் வழங்கப்பட்டிருந்தால், ஜிஎஸ்டி வரி விதிக்கப்படாது. பணி நிறைவு சான்றிதழ் வழங்கப்படவில்லை என்றால் விற்பனையின் போது ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும்.

ஜவஹர்லால் நேரு தேசிய ஊரக புதுப்பிப்பு திட்டம், ராஜிவ் அவாஸ் யோஜனா, பிரதம மந்திரி அவாஸ் யோஜனா மற்றும் மாநில அரசின் திட்டத்தின் கீழ் கட்டப்படும் குறைந்த பட்ஜெட் வீடுகளுக்கு 8 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும். இதை இன்புட் டாக்ஸ் கிரெடிட் (ஐடிசி) மூலம் பில்டர்கள் சரி செய்து கொள்ளலாம். இதுபோன்ற குறைந்த பட்ஜெட் வீட்டு திட்டங்களுக்கு பில்டர்கள் தங்கள் கணக்கில் போதுமான ஐடிசி இருக்கும் என்பதால், அதற்கு ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டியிருக்காது. குறைக்கப்பட்ட ஜிஎஸ்டி வரிக்கான பயன்களை வழங்கும் வகையில், பிளாட்டுகள்/கட்டிடங்கள் வாங்குவோருக்கு பில்டர்கள் விலையை குறைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ChongqingCycleRace

    சீனாவில் நடைபெற்ற குழந்தைகளுக்கான சைக்கிள் போட்டி: பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது

  • BrazilBarMassacre

    பிரேசில் மதுபான விடுதியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு..: 6 பெண்கள் உள்பட 11 பேர் பலியான பரிதாபம்!

  • 21-05-2019

    21-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • russiabicycle

    ரஷ்யாவில் களைகட்டிய பிரம்மாண்ட சைக்கிள் திருவிழா: சுமார் 47,000 பேர் பங்கேற்பு

  • canadaplastic

    கனடாவில் பிளாஸ்டிக்கை ஒழிக்க விழிப்புணர்வு கண்காட்சி: கடலில் வீசப்பட்ட பொருட்களை வைத்து கடல்வாழ் உயிரினங்கள் வடிவமைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்