SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காஷ்மீரில் பரிதாபம் பஸ் கவிழ்ந்து விபத்து 13 பயணிகள் உயிரிழப்பு

2018-12-09@ 01:47:17

ஜம்மு: காஷ்மீரில் பஸ் நிலைதடுமாறி 100 மீட்டர் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 4 பெண்கள் உள்பட 13 பேர் பரிதாபமாக பலியாகினர். காஷ்மீர் மாநிலத்தின் லோரான் பகுதியில் இருந்து பூஞ்ச் பகுதிக்கு பஸ் ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. பூஞ்ச் அருகே மாண்டி பகுதியில் உள்ள மலைப்பகுதியில் சென்றபோது பஸ், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து 100 மீட்டர் பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்தது. இதில் சம்பவ இடத்திலேயே 6 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவம் பற்றி அறிந்து விரைந்து வந்த போலீசார் மீட்புபணியில் ஈடுபட்டனர். அப்போது காயம் அடைந்து உயிருக்கு போராடிய மேலும் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் 17 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு அருகேயுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் பலி 13 ஆக உயர்ந்தது.

இதில் 4 பேர் பெண்கள். காயம் அடைந்தவர்களில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருந்ததை அடுத்து அவர்கள் ஜம்முவில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு ஹெலிகாப்டர் மூலம் கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்தில் இறந்தவர்களுக்கு கவர்னர் சத்தியபால் மாலிக் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். தொடர்ந்து மலைப்பகுதியில் நடக்கும் விபத்துக்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும், பழைய வாகனங்களின் நிலை குறித்து ஆய்வு செய்ய தனிக்குழு அமைக்க வேண்டும் என்றும் மாநில காங்கிரஸ் கமிட்டி கோரிக்கை விடுத்துள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • nigeriaaa_twins1

    இரட்டையர்களால் நிரம்பி வழியும் நைஜிரீய நகரம் !! : வியப்பூட்டும் புகைப்படங்கள்

  • russia_anumin111

    ரஷியாவில் உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் : பிரம்மாண்ட சரக்கு கப்பலைப் போல் காட்சியளிக்கும் வினோதம்

  • largestpotato

    உலகின் மிகப்பெரிய உருளைக்கிழங்கில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி : அமெரிக்காவில் விநோதம்

  • marsgobi_desert1

    செவ்வாய் கிரகத்தில் வாழ்வது போன்ற அனுபவத்தை கொடுக்கும் தளம் : சீனாவின் கோபி பாலைவனத்தில் திறப்பு

  • jetairweys_delli11

    வாழ்வாதாரத்தை காக்க வலியுறுத்தி, டெல்லி, மும்பையில்ஜெட்ஏர்வேஸ் ஊழியர்கள் போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்