SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திமுக - காங்கிரஸ் கூட்டணியே வெற்றிதான் : டெல்லியில் திருநாவுக்கரசர் பேட்டி

2018-12-09@ 01:46:32

புதுடெல்லி: ‘‘திமுக - காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணியே தேர்தலில் மிகப்பெரிய வெற்றி தான்’’ என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் டெல்லியில் தெரிவித்தார்.தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், டெல்லியில் ஐமு கூட்டணி தலைவர் சோனியா காந்தியை அவருடைய இல்லத்தில் நேற்று சந்தித்து பேசினார். பின்னர், அவர் அளித்த பேட்டியில்  கூறியதாவது: நாளை (இன்று) சோனியா காந்தியின் பிறந்தநாள். அதற்காக கட்சி உறுப்பினர்களுடன் சென்று வாழ்த்து தெரிவித்தோம். கருணாநிதியின் உருவ சிலையை திறப்பு விழாவுக்காக தமிழகம் வரும் சோனியா காந்திக்கு சிறப்பான வரவேற்பு வழங்கப்படும். இன்றைய சந்திப்பின் போது அவரிடம் அரசியல் எதுவும் பேசவில்லை. சென்னைக்கு வரும் நிகழ்ச்சிகள் பற்றி ஆலோசனை நடத்தினோம். தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள், மாவட்ட செயலாளர்களாக இருந்தவர்கள் யாரும் என்னை தலைவர் பதவியில் இருந்து மாற்றும்படி கூறவில்லை. இ.வி.கே.எஸ்.இளங்கோவன் மட்டும்தான் தொடர்ந்து இதை வலியுறுத்தி வருகிறார். அவர் கட்சியின் மாநில தலைவராக இருந்தபோது, கட்சி உறுப்பினர்கள் பலரை பதவி நீக்கம் செய்துள்ளார். பலரை தரம் தாழ்த்தி பேசி வந்தார். இது அனைவரும் அறிந்த ஒன்றாகும். மேலும், நானும் இருக்கிறேன் என்பதை காட்டிக்கொள்ளவே எதையாவது ஒன்றை தொடர்ந்து பேசி வருவதை அவர் வழக்கமாக கொண்டுள்ளார்.

மேலும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நினைத்தால்தான் மாநில தலைவர்களின் பொறுப்பு என்பது மாறுபடும். அதுவரை எதுவும் நடக்காது. நாடாளுமன்ற தேர்தலில் திமுக - காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்திருப்பதே மிகப்பெரும் வெற்றிதான். ஆர்கே.நகர் என்ற ஒரு தொகுதியின் தேர்தலை வைத்து எந்த ஒரு கட்சியின் வெற்றி, தோல்வியை நிர்ணயம் செய்ய முடியாது. ஐந்து மாநில தேர்தலி–்ல் காங்கிரஸ் மிகப்பெரிய வெற்றியடையும். அதில், தலைவர் ராகுல் காந்தியின் மிகப்பெரும் பங்கு உள்ளது. அதேபோல், மதிமுக தலைவர் வைகோ குறித்து கூற வேண்டுமானால் அரசியலில் நிரந்தர எதிரி மற்றும் நண்பன் என்று எப்போதும் கிடையாது என்றுதான் தெரிவிக்க வேண்டும். டிடிவி.தினகரனுக்கும் காங்கிரசுக்கும் எந்தவித சம்பந்தமோ, தொடர்போ கிடையாது. நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர் யார் எத்தனை தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட உள்ளது? ஆகியவை குறித்து பேசி முடிவெடுக்க நிறைய காலம் உள்ளது. ராகுல் காந்தி விருப்பப்பட்டால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்.இவ்வாறு அவர் கூறினார். இதற்கு முன்னதாக சோனியா காந்திக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து விட்டு வந்த இவிகேஎஸ்.இளங்கோவன் கூறுகையில்,” திமுக காங்கிரஸ் கூட்டணி என்பது முடிவான ஒன்றாகும். எங்களது ஒரே குறிக்கோள் பிரதமர் மோடியையும், பாஜ கட்சியையும் தோற்கடித்து மதச்சார்பற்ற ஆட்சியை உருவாக்க வேண்டும் என்பது மட்டுமே. தமிழக காங்கிரஸ் தலைவராக இருக்கும் திருநாவுக்கரசரை மாற்ற வேண்டும் என்ற கருத்து பரவலாக உள்ளது. அதுகுறித்து கட்சி தலைமையிடம் எங்களது தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது என அவர் கூறினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 26-05-2019

  26-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • colorado

  கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

 • trainchina

  சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

 • 24-05-2019

  24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

 • 23-05-2019

  23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்