SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காஷ்மீரில் இந்தாண்டில் இதுவரை 232 தீவிரவாதிகளை கொன்றது ராணுவம் : கல்வீச்சு சம்பவங்களும் குறைந்தன

2018-12-09@ 01:45:50

ஜம்மு: காஷ்மீர் மாநிலத்தில் இந்தாண்டில் இதுவரை 232 தீவிரவாதிகளை பாதுகாப்பு படைகள் கொன்றுள்ளன. மேலும், கல்வீச்சு தாக்குதல் சம்பவங்களும் குறைந்துள்ளன. காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை பாதுகாப்பு படைகள் தீவிரப்படுத்தி இருக்கின்றன. எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருப்பதால், தீவிரவாதிகள் ஊடுருவலும் தடுக்கப்பட்டு உள்ளன. இதனால், பாகிஸ்தான் பகுதியில் இருந்து ஊடுருவ முடியாமல் தீவிரவாதிகள் திணறி வருகின்றனர். இந்த நடவடிக்கைகள் காரணமாக, காஷ்மீர் மாநிலத்தில் செயல்படும் தீவிரவாதிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. இந்நிலையில், இம்மாநிலத்தில் இந்தாண்டில் இதுவரை பாதுகாப்பு படைகள் நடத்திய தாக்குதல்களில் 232 தீவிரவாதிகள் கொல்லப்பட்டு இருக்கின்றனர். கடந்த ஜூன் 25்ம் தேதி முதல் செப்டம்பர் 14ம் தேதி வரையிலான 80 நாட்களில் மட்டும் 51 தீவிரவாதிகளும், செப்டம்பர் 15 முதல் இம்மாதம் 5ம் தேதி வரையில் 85 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டுள்ளனர். காஷ்மீர் மாநிலத்தில் வெளிநாட்டு தீவிரவாதிகள் உட்பட மொத்தம் 240 தீவிரவாதிகள் முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றனர். இவர்களை ேவட்டையாடவும் ராணுவம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

தீவிரவாதிகள் கொல்லப்படும் போதெல்லாம், பாதுகாப்பு படைகளுக்கு எதிரான பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபடுவது கடந்த சில மாதங்களாக அதிகளவில் நடந்து வந்தது. இந்த ே்பாராட்டங்களில் வீரர்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்படுவதும் அதிகமாக நடந்தது. பாதுகாப்பு படைகள் எடுத்த கடுமையான நடவடிக்கையால், தற்போது இதுபோன்ற கல்வீச்சு சம்பவங்களும் கணிசமாக குறைந்துள்ளன.இந்நிலையில், இம்மாநிலத்தின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில் உள்ள இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் நேற்று காலை துப்பாக்கிசூடு நடத்தினர். இதற்கு இந்திய படைகளும் பதிலடி கொடுத்தன. இந்த தாக்குதலில் யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் இல்லை. தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிசூடு நடந்து வருகிறது. இதனால், எல்லைக்கட்டுப்பாடு கோடு பகுதியில் பதற்றம் நிலவுகிறது. கடந்த வியாழக்கிழமை இதே பகுதியில் பாகிஸ்தான் வீரர்கள் நடத்திய துப்பாக்கிசூட்டில் எல்லைப் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். இந்திய வீரர்கள் நடத்திய பதில் தாக்குதலில் ஏராளமான பாகிஸ்தான் வீரர்கள் காயம் அடைந்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ChennaiMarinaMaasiMagam

    மாசி மகத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியின் புகைப்படங்கள்

  • AlbinoTurtleheart

    உடலின் வெளிப்புறத்தில் இதயத்துடன் பிறந்துள்ள அபூர்வ வெள்ளை ஆமை: ஆச்சரியத்தில் ஆராய்ச்சியாளர்கள்!

  • ModiSalmanDelhi

    சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் இந்தியா வருகை...நேரில் சென்று வரவேற்ற பிரதமர் மோடி: புகைப்படங்கள்

  • SuperSnowMoon2k19

    அதிக ஒளியுடனும், பூமிக்கு மிக அருகிலும் தெரிந்த சூப்பர் மூன்: ரம்மியமான அரிய நிகழ்வை கண்டு ரசித்த மக்கள்!

  • 20-02-2019

    20-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்