SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அமைச்சர் தங்கமணி உறுதி புயல் பாதித்த அனைத்து பகுதியிலும் ஒரு வாரத்தில் மின்சப்ளை

2018-12-09@ 01:44:54

நாமக்கல்: நாமக்கல்லில் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி நேற்று அளித்த பேட்டி: கஜா புயலால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களிலும் நகராட்சி  பகுதியில் 100 சதவீதம் மின்சப்ளையும், கிராமப்பகுதியில் 50 சதவீதம்  மின்சப்ளையும் அளிக்கப்பட்டுள்ளது. மின் பணியாளர்கள் வேகமாக பணியாற்றி  வருகிறார்கள். இன்னும் ஒருவாரத்தில் 4 மாவட்டங்களிலும் 100%  மின்சப்ளை கொடுக்கப்பட்டு விடும். திருவாரூர் மாவட்டத்தில்  திருத்துறைப்பூண்டி, முத்துபாண்டி ஆகிய ஊர்களில் வயல்வெளியில் தண்ணீர்  அதிகமாக தேங்கியுள்ளதால் மின்கம்பங்கள் நடுவதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன.  

அங்கு அதிக பணியாளர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விளை  நிலங்களில் மின்கோபுரங்கள் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து  வருகிறார்கள். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.  ஒருவாரத்துக்குள் இந்த பிரச்னைக்கு தீர்வு காணப்படும். தமிழகம் தற்போது  மின்மிகை மாநிலமாக  இருக்கிறது. மேலும் 4 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தியை  அதிகரிக்க புதிய மின்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. புதிய  மின்பாதைகள் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

ரகசிய ஆடியோ இருந்தால் வெளியிடட்டும்

டிடிவி தரப்பினர், உங்களை பற்றி ரகசிய ஆடியோ வெளியிடப்போவதாக கூறி  வருகிறார்களே என நிருபர்கள் கேட்டதற்கு, அமைச்சர் தங்கமணி அளித்த பதில், “மடியில் கனம் இருந்தால்தான் வழியில் பயம் வரும். எனக்கு எந்த பயமும் இல்லை. ஆடியோ இருந்தால் வெளியிடட்டும். அமைச்சர் ஜெயக்குமார்  பற்றி இப்படித்தான் கூறினார்கள். அமைச்சர் பதில் கூறிய பிறகு, பதில்  வரவில்லை. அவருக்கு எதிராக பேசுபவர்களை இப்படி ஆடியோ எனக்கூறி பிளாக்மெயில்  செய்து வருகிறார்கள். இதை பற்றி எல்லாம் கவலைப்படவில்லை” என்றார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ChongqingCycleRace

    சீனாவில் நடைபெற்ற குழந்தைகளுக்கான சைக்கிள் போட்டி: பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது

  • BrazilBarMassacre

    பிரேசில் மதுபான விடுதியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு..: 6 பெண்கள் உள்பட 11 பேர் பலியான பரிதாபம்!

  • 21-05-2019

    21-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • russiabicycle

    ரஷ்யாவில் களைகட்டிய பிரம்மாண்ட சைக்கிள் திருவிழா: சுமார் 47,000 பேர் பங்கேற்பு

  • canadaplastic

    கனடாவில் பிளாஸ்டிக்கை ஒழிக்க விழிப்புணர்வு கண்காட்சி: கடலில் வீசப்பட்ட பொருட்களை வைத்து கடல்வாழ் உயிரினங்கள் வடிவமைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்