SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

போடி அருகே குடிநீர் கோரி ஓபிஎஸ்சை பெண்கள் முற்றுகை

2018-12-09@ 01:44:02

தேனி:  குடிநீர் கோரி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை பெண்கள் முற்றுகையிட்டதால் போடி அருகே பரபரப்பு ஏற்பட்டது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது தொகுதியான தேனி மாவட்டம், போடியில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்றார். இதையொட்டி அய்யனார்புரம், கோட்டைப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் மக்களை சந்தித்து அவர் குறைகளைக் கேட்டார்.  வீரசின்னம்மாள்புரம் கிராமத்துக்கு வந்தபோது, அவரது காரை 50க்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகையிட்டனர். இதையடுத்து காரில் இருந்து இறங்கிய ஓ.பன்னீர்செல்வத்திடம், ``எங்கள் பகுதிக்கு குடிநீர் வருவதே இல்லை. புகார் செய்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை’’ என்றனர். அப்போது, ‘‘குடிநீர் பிரிவு அதிகாரிகள் வந்துள்ளனரா’’ என்று ஓ.பன்னீர்செல்வம் உடன் வந்தவர்களிடம் கேட்டார். அவர்கள் ‘‘இல்லை’’ என்றதும், முற்றுகையிட்ட பெண்களிடம், ``விரைவில் உங்கள் பகுதிக்கு குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்கிறேன்’’ என்று உறுதியளித்தார். பின்னர் அங்கிருந்து அவர் புறப்பட்டுச் சென்றார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • animalsmuggling

    இந்தோனேசியா துறைமுகத்தில் சட்டவிரோதமாக கடத்த முயன்ற பல்வேறு உயிரினங்கள் மீட்பு

  • swimminggeneva

    ஜெனீவாவில் கிறித்துமஸ் தினத்தை முன்னிட்டு நீச்சல் போட்டி : நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு

  • Cairoegyptopen

    மம்மிகளின் உலகமான எகிப்தில் 4400 ஆண்டு பழமை வாய்ந்த பிரமீடு கெய்ரோவில் திறக்கப்பட்டது

  • 17-12-2018

    17-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 16-12-2018

    16-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்