SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மேகதாதுவில் அணை கட்டினால் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும் : ஆர்ப்பாட்டத்தில் வாசன் பேச்சு

2018-12-09@ 01:43:21

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் தமாகா சார்பில், மேகதாதுவில் அணை கட்ட முயற்சி செய்யும் கர்நாடக அரசை கண்டித்தும், அனுமதி அளித்த மத்திய அரசை கண்டித்தும் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பங்கேற்று பேசியதாவது: காவிரி பிரச்னை தொடர்பாக தமிழக மக்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை. இந்நிலையில், சற்றும் மனிதாபிமானம் இல்லாமல் கர்நாடகாவில் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் திட்டத்தை கொண்டு வர முயற்சி செய்கிறார்கள்.

இதற்கு மத்திய அரசும், நீர்வள ஆணையமும் அனுமதி கொடுத்திருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதை போல உள்ளது. தமிழகத்திற்கு அருகில் அணை கட்டுவதால் குறிப்பாக தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்படும். கடந்த 50 ஆண்டுகளாக படிப்படியாக காவிரியில் நாம் உரிமையை இழந்துள்ளோம். தமிழகத்தில் ஏற்கனவே உணவு பற்றாக்குறை உள்ளது. இந்த சூழ்நிலையில் மேகதாது அணை கட்டப்பட்டால் மிகவும் மோசமான நிலை ஏற்படும். டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக மாறிவிடும். தமிழகத்தில் திருப்பூர் முதல் வேலூர் வரை, ஒகேனக்கல் முதல் நாகப்பட்டினம் வரையில் பெரும்பாலான மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். மேலும், 25 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும். எனவே, மேகதாது அணை கட்டும் திட்டத்தை நாம் அனைவரும் ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும். இவ்வாறு ஜி.கே.வாசன் பேசினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • malar_modi12

    2வது முறையாக பிரதமராகும் நரேந்திர மோடி ; கட்சித் தலைவர்கள் மோடிக்கு மலர் கொத்துக்களுடன் வாழ்த்து

  • peruearthqq1

    பெரு நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவுகோலில் சுமார் 8 ஆக பதிவு

  • Trump_japan11

    அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஜப்பான் பயணம் : ஜப்பான் பிரதமருடன் கோல்ஃப் விளையாடி அசத்தல்

  • kashmir_kola11

    தீவிரவாதி ஜாகீர் முசா கொல்லப்பட்டதன் எதிரொலி : காஷ்மீரில் வன்முறை வெடிப்பு; ஊரடங்கு உத்தரவு அமல்

  • 20aacident_died11

    சூரத்தில் கல்வி பயிற்சி மையத்தில் பயங்கர தீ விபத்து: 20 பேர் பரிதாப பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்