SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழில் பெயர் பலகை வைக்கும் அரசாணையை அமல்படுத்தாததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு : முதன்மை செயலருக்கு நோட்டீஸ்

2018-12-09@ 01:42:36

மதுரை: தமிழில் பெயர் பலகை வைக்கும் அரசாணையை அமல்படுத்தாததால், தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், அரசு முதன்மை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், மோர்பண்ணையை ேசர்ந்த வக்கீல் திருமுருகன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்திலுள்ள பெரும்பாலான வணிக நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள் தங்களின் நிறுவன பெயர் பலகைகளை தமிழில் வைக்காமல் ஆங்கிலத்தில் மட்டுமே வைத்துள்ளன. கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் பெயர் பலகைகள் அனைத்தும் அந்த மாநில மொழியிலேயே வைக்கப்பட்டுள்ளன. தமிழக அரசின் 1987 அரசாணைப்படி ஆட்சி மொழியான தமிழ் ெமாழியை, அனைத்து அரசு அலுவலகங்கள், தனியார் கடைகள் மற்றும் நிறுவனங்களில் முதல் மொழியாக பயன்படுத்த வேண்டும். ஆங்கிலம் உள்ளிட்ட பிறமொழிகளை பயன்படுத்துவதாக இருந்தால் தமிழ் மொழியின் கீழ் 5:3:2 என்ற விகிதத்தில் பயன்படுத்த வேண்டும்.

ஆனால், இந்த அரசாணையை தமிழகத்தில் யாரும் பின்பற்றவில்லை. இது தமிழ் மொழியை அவமதிக்கும் செயல். எனவே, அரசாணையை பின்பற்றி பெயர் பலகைகளை உரிய விகிதப்படி தமிழ் மொழியில் வைக்க உத்தரவிடக்கோரி ஏற்கனவே மனு செய்திருந்தேன். அதில், அரசாணையை முறையாக அமல்படுத்த தமிழ் பண்பாடு மற்றும் கலாசாரத்துறை முதன்மை செயலர் 4 மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்க கடந்தாண்டு ஜூலையில் உத்தரவிடப்பட்டது. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இதற்கு காரணமான அதிகாரி மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.  இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர், மனு குறித்து தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்துறை முதன்மை செயலர் வெங்கடேசனுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை டிச.19க்கு தள்ளி வைத்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

  • libya_sandai11

    தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

  • thuppaki-12jk

    13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

  • hurricane_12

    அமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்