SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அரசாணையை எரித்த ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் : அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

2018-12-09@ 01:41:43

ஈரோடு: அரசாணையை எரித்த ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். ஈரோட்டில் மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் கலந்து கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் 1,500 உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. பள்ளிகளில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு 3% இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதை தற்போது 4 சதவீதமாக உயர்த்தி உள்ளோம். மேலும் அவர்களது தேவைக்கு ஏற்பஉதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.  

அரசாணையை எரித்த ஆசிரியர்கள் மீது சில இடங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தங்களது கோரிக்கைக்காக ஆசிரியர்கள் ஜனநாயக ரீதியாக போராட்டம் நடத்துவது என்பது வேறு, அரசாணையை எரிப்பது என்பது வேறு. அரசு சார்பிலும் அரசாணையை எரித்த ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ஆசிரியர்களின் பிரச்னைகளை தீர்ப்பதற்காக ஒரு நபர் குழு அமைக்கப்பட்டு, அவர்களுடன் பேச்சு நடத்தி வருகிறோம். மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளை, பெற்றோருக்குப்பின் பராமரிக்க, காப்பகம் தேவை என கோரிக்கை வைத்துள்ளனர். இதுதொடர்பாக முதல்வரிடம் பேசி, விரைவில் அனுமதி பெற்று  நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

  • libya_sandai11

    தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

  • thuppaki-12jk

    13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

  • hurricane_12

    அமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்