SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தாயின் திதிக்கு விடுமுறை தர அதிகாரிகள் மறுப்பு மின்வாரிய செயற்பொறியாளர் தூக்கிட்டு தற்ெகாலை : பழனி அருகே பரிதாபம்

2018-12-09@ 01:34:25

பழநி: தாயின் திதிக்கு உயரதிகாரிகள் விடுமுறை தர மறுத்ததால் பழநி அருகே மின்வாரிய செயற்பொறியாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ராமநாதபுரத்தை சேர்ந்தவர் தனபால் (57). திண்டுக்கல் மாவட்டம், பழநி ஆயக்குடி மின்வாரியத்தில் உதவி பொறியாளராக பணி புரிந்து வந்தார். இவரது மனைவி பானு. மகள் லேகா (31), மகன் கேசவன் (29). லேகாவுக்கு திருமணமாகி விட்டது. குடும்பத்தினர் ராமநாதபுரத்தில் இருக்க, தனபால் பழநி ஆர்எஸ் ரோட்டில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். நேற்று மாலை வழக்கம்போல் தனபால் பணி முடிந்து வீட்டிற்கு வந்தார். மாலை 5.30 மணியளவில் மகன் கேசவன் அங்கு வந்தார். அப்போது மின்விசிறியில் தனபால் நைலான் கயிறால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார். தகவலறிந்து பழநி டவுன் போலீசார் வந்து அவரது உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வீட்டில் நடத்திய சோதனையில் தற்கொலைக்கு முன்பாக தனபால் எழுதிய கடிதம் சிக்கியது கடிதத்தில், ‘அன்புள்ள அம்மா.. நீங்கள் இறந்த நாளிலே நானும் இறந்திருக்க வேண்டும். அதை செய்யாததால் இந்த துயரமான முடிவை எடுக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டேன். அன்பு மனைவி பானுவும், எனது மகளும், எனது மகனும் இந்த முடிவை எடுத்ததற்கு மன்னிக்க வேண்டும். எனது அம்மாவின் 1 வருட ெதவசம் செய்ய மேல் அதிகாரிகள் லீவு தராததால் இந்த முடிவை எடுக்கும் சூழலுக்கு ஆகி விட்டேன். அப்பிராணிகள்தான் தண்டிக்கப்படுவார்கள்.  நான் எனது அம்மாவின் பிள்ளையாக இருப்பேன்.

அன்புள்ள மனைவி, உன்னுடன் சேர்ந்து வாழ எனக்கு கொடுத்து வைக்கவில்லை. பேரன், பேத்திகளுடன் நீயாவது சிறிதுகாலம் வாழ்ந்து விட்டு வா. எந்த சூழலிலும் யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். யாரிடமும் கடன் வாங்கவும் வேண்டாம். வீட்டு பத்திரம் திண்டுக்கல் செயற்பொறியாளர் அலுவலகத்தில் உள்ளது. மறந்து விடாதீர்கள். அன்பு மகளே, அம்மாவை திட்டாதே. அவரின் குணம் உனக்கு தெரியும். அனுசரித்து செல். தம்பியுடனும் அனுசரித்து செல்’ என குடும்பத்தினரை பற்றி உருக்கமாக எழுதியிருந்தார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது, ‘‘தாய் திதிக்காக தனபால் 2 நாட்கள் விடுமுறை கேட்டுள்ளார். அதற்கு உயரதிகாரிகள் தர மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து தனபால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரிய வந்துள்ளது’’ என்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • lisbon_tramp11

  லிஸ்பனில் டிராம் ரயில் தடம் புரண்டு விபத்து : 28 பேர் காயம்

 • 15-12-2018

  15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

 • AmazonIllegalMining

  அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

 • chinasnowfall

  கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

 • hungary_policepadhuga11

  புதிய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்தியதை கண்டித்து ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்