SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அமைச்சர் உதயகுமார் பேச்சு நகரங்களில் அதிமுகவுக்கு ஓட்டு வங்கி இல்லை

2018-12-09@ 01:32:08

திருமங்கலம்:மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நேற்று நடைபெற்றது.  கூட்டத்துக்கு, தலைமை வகித்து அமைச்சர் உதயகுமார் பேசியதாவது: ஜெயலலிதா இல்லாத நிலையில், தற்போது அதிமுக ஆட்சி நடந்து வருகிறது. அவர் இருந்தபோது நமது செயல்பாடு, இல்லாதபோது நமது செயல்பாடு ஆகியவற்றை பொதுமக்கள் கண்காணித்து வருகின்றனர். கடந்த தேர்தலில் கிராமப்புறங்களில் அதிமுகவுக்கு அதிக ஓட்டு கிடைத்தது. நகர்ப்புறங்களில் அதிமுகவுக்கு ஓட்டு வங்கி எதிர்பார்த்த அளவு இல்லை. வரும் தேர்தல்களில் நகர்ப்புற மக்களிடம் அரசின் சாதனைகளை விளக்கி கூறி அதிக வாக்குகளை பெற முயற்சிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

‘கட்சியில் கருத்து வேறுபாடு உள்ளது’

மதுரை மாவட்டம், சமயநல்லூர் அருகே, பரவையில் அரசின் நலத்திட்ட உதவி வழங்கும்  விழாவில் பங்கேற்ற அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறுகையில்,‘ஸ்டெர்லைட் மற்றும் மேகதாது அணை விவகாரத்தில், தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது’’ என்றார். அப்போது, ‘‘மதுரை அதிமுகவில் கோஷ்டி பூசல் நிலவுகிறதா’’ என கேட்டதற்கு, ‘ஆளுங்கட்சி என்பதால் எங்கள் சகோதரர்களுக்குள் கருத்து வேறுபாடு நிலவுகிறது. ஆனால், பொது எதிரி என வரும்போது, நாங்கள் அனைவரும் ஒன்று சேர்வோம்’’ என்றார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • animalsmuggling

    இந்தோனேசியா துறைமுகத்தில் சட்டவிரோதமாக கடத்த முயன்ற பல்வேறு உயிரினங்கள் மீட்பு

  • swimminggeneva

    ஜெனீவாவில் கிறித்துமஸ் தினத்தை முன்னிட்டு நீச்சல் போட்டி : நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு

  • Cairoegyptopen

    மம்மிகளின் உலகமான எகிப்தில் 4400 ஆண்டு பழமை வாய்ந்த பிரமீடு கெய்ரோவில் திறக்கப்பட்டது

  • 17-12-2018

    17-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 16-12-2018

    16-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்