SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

150 ஆண்டுகளுக்கு பிறகு அரசு மருத்துவமனை நர்சுகளின் சீருடைகள் மாறுகிறது

2018-12-09@ 01:30:46

புதுக்கோட்டை:  தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், தாலுகா மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. இங்கு 25 ஆயிரம் நர்சுகள் பணியாற்றி வருகின்றனர். இங்கு பணியாற்றும் செவிலியர்களுக்கு ஆங்கிலேயர்கள் காலத்தில் இருந்து சுமார் 150 ஆண்டுகளாக வெள்ளை நிற சீருடை அணிந்து பணியாற்றி வந்தனர். இந்த சீருடை, பினோபாம் என்று கூறப்படுகிறது. கால மாற்றத்திற்கு ஏற்றார்போல் இந்த சீருடை அணிந்து பணியாற்றுவது சிரமமாக இருப்பதாக நர்சுகள் தெரிவித்து வந்தனர். குறிப்பாக நோயாளிகளுக்கு குனிந்து, தரையில் அமர்ந்து சிகிச்சை அளிக்க முடியாத அசவுகரியங்கள் ஏற்பட்டதாக அரசிடம் தொடர்ந்து தெரிவித்து வந்துள்ளனர். இந்த சிரமங்களில் இருந்து விடுபடும் வகையில் தமிழக அரசு நர்சுகளின் சீருடையில் மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த மாற்றம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் வளர்மதி கூறியதாவது: நர்சுகள் 150 ஆண்டுகாலமாக அசவுகரியங்களுடன் பழைய வகையான சீருடைகளை அணிந்து சிரமத்துடன் பணியாற்றி வருகின்றனர். தற்போது இருக்கும் சூழ்நிலையில் நர்சுகளின் பணிக்கு ஏற்றவாறு சீருடை மாற்றம் குறித்து அரசு அதிகாரிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தோம். தற்போது சீருடையில் மாற்றத்திற்கான அரசாணை வெளியிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. தமிழக அரசு ஆணையின்படி நர்சுகள் பணியில் முதல் பத்தாண்டுகள் வெள்ளை நிற பேன்ட் சட்டையும், இதன்பிறகு வெள்ளை நிற சுடிதார், கோட்டும் அணிந்து பணியாற்றுவர். மேலும் 25 ஆண்டுகளுக்கு பிறகு பிங் நிற புடவை மற்றும் கோட் அணிந்தும், 30 ஆண்டுகளுக்கு பிறகு  பச்சை நிற புடவை மற்றும் கோட் அணிந்து பணியாற்றுவார்கள். மேலும் பச்சிளம் குழந்தை பராமரிப்பு பிரிவில் பணியாற்றும் செவிலியர்கள் பிங் பேன்ட், சட்டை அணிந்து பணிபுரிவர். இதேபோல் ஆண் செவிலியர்களுக்கும் சீருடையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • CanadaSyrianChildren

    கனடாவில் உள்ள வீட்டில் பயங்கர தீவிபத்து: ஒரே குடும்பத்தை சேர்நத 7 குழந்தைகள் பலி

  • DroneLanternChina

    ட்ரோன்களைப் பறக்கவிட்டு வித்தியாசமான லாந்தர்ன் விளக்குத் திருவிழா: சீனாவில் நடைபெற்றது

  • AttukalPongalaKerala

    ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் விழா கொண்டாட்டம்: லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்பு

  • mahipoornima

    கும்பமேளாவில் மகி பூர்ணிமா கோலாகலம் : கங்கைக்கு திரண்டு வந்து புனித நீராடிய பக்தர்கள்

  • AeroShowBangalore19

    பெங்களூருவில் ஆசியாவின் மிகப்பெரிய ஏர் ஷோ: ரஃபேல் உள்ளிட்ட கண்கவர் விமானங்கள் சாகசம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்