SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாஜ மாநில தலைவர் தமிழிசை பேட்டி காவியை பற்றி சிவப்புகள் கவலைப்பட வேண்டாம்

2018-12-09@ 01:29:42

கோவை: நாட்டில் 19 மாநிலங்களில் பாஜ ஆட்சி ெசய்கிறது. ஆனால் கம்யூனிஸ்ட் ஆட்சி ஒரு மாநிலத்தில் மட்டும்தான் உள்ளது. எனவே காவியை பற்றி சிவப்புகள் கவலைப்பட வேண்டாம் என கோவையில் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். கோவை விமான நிலையத்தில் நேற்று பாஜ மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: நாட்டில் 19 மாநிலங்களில் பாஜக  ஆட்சி செய்து வருகிறது. ஆனால் ஒரு மாநிலத்தில் மட்டுமே கம்யூனிஸ்ட் ஆட்சி நடக்கிறது. எனவே, காவியைப் பற்றி சிவப்புகள் கவலைப்பட வேண்டாம். தமிழகத்தில் நிச்சயம் காவிக்கொடி பறக்கும். முத்தரசன், அவருடைய கூட்டணி குறித்து கவலைப்பட வேண்டும்.

மேகதாதுவில் மத்தியஅரசு ஆய்வு செய்ய அனுமதி கொடுத்ததற்கு ஒப்புதல் அளித்தது போல் வைகோ பேசி வருகிறார். மேகதாதுவில் அணைக்கட்டுவதால் தமிழகத்துக்கு பாதிப்பு என்றால் அனுமதி கொடுக்கமாட்டார்கள். எதை எடுத்தாலும் ஆராயாமல் பின் விளைவுகளை பற்றி சிந்திக்காமல் எதற்கெடுத்தாலும் வேண்டுமென்று போராடுவது சில பேரின் வேலையாக உள்ளது. ராஜிவ் கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்ற 7 பேர் விடுதலையில் சட்டத்திற்குட்பட்டு என்ன நடக்குமோ அது நடக்கும். அரசியல்வாதிகள் சொல்வதைபோல சட்டத்தை வளைக்க முடியாது. நல்ல நிர்வாகம், ஊழலற்ற ஆட்சியை கொடுத்துவிட்டு தான் வாக்கு சேகரித்துள்ளதால் நிச்சயம் ராஜஸ்தான், தெலங்கானா உள்ளிட்ட 5 மாநில தேர்தலில் நாங்கள் பெரும்பான்ைமயுடன் வெற்றிபெறுவோம் என்றார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mexicovalcano

    மெக்ஸிகோவில் எரிமலை வெடித்ததில் 8 ஆயிரம் அடி உயரத்திற்கு புகை மண்டலம் : பொதுமக்கள் வெளியேற்றம்

  • modipuja

    உத்தர பிரதேசத்தில் கும்பமேளா நடக்கவுள்ள நதிகரையில் பிரதமர் மோடி பூஜை செய்து வழிபாடு

  • animalsmuggling

    இந்தோனேசியா துறைமுகத்தில் சட்டவிரோதமாக கடத்த முயன்ற பல்வேறு உயிரினங்கள் மீட்பு

  • swimminggeneva

    ஜெனீவாவில் கிறித்துமஸ் தினத்தை முன்னிட்டு நீச்சல் போட்டி : நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு

  • Cairoegyptopen

    மம்மிகளின் உலகமான எகிப்தில் 4400 ஆண்டு பழமை வாய்ந்த பிரமீடு கெய்ரோவில் திறக்கப்பட்டது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்