SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

போலீசிடம் இருந்து தப்பிய கைதி ஆம்னி பஸ் மோதியதில் சாவு

2018-12-09@ 01:28:57

திண்டிவனம்: திருவண்ணாமலை மாவட்டம் போளூரை சேர்ந்தவர் ராஜாமணி மகன் சிவஞானம் (34). இவர் கடந்த சில வருடங்களுக்கு முன் செங்கல்பட்டில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். அப்போது அண்ணாநகர் என்ற இடத்தில் சந்திரசேகரன் என்பவரது வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்துள்ளார். அப்போது சந்திரசேகரன் மகள் சர்மிலி (24) என்பவருடன் காதல் ஏற்பட்டது. ஆனால், சிவஞானத்தின் நடத்தை சரியில்லாததால் சர்மிலி விலகிவிட்டார். இந்நிலையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு சர்மிலி அவரது தாய்மாமன் சந்தோஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டு, அவர்கள் இருவரும் பெங்களூருவில் குடும்பம் நடத்தி வருகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த சிவஞானம், சர்மிலியை காதலிக்கும் போது நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சர்மிலிக்கும், அவரது குடும்பத்தாருக்கும் அனுப்பி வைத்ததுடன், அப்புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரப்பி விடுவேன் என்று கூறி மிரட்டினார்.

இதுகுறித்து சந்திரசேகரன் செங்கல்பட்டு காவல்நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார், மதுரையில் இருந்த சிவஞானத்தை பிடித்து, விசாரணைக்காக நேற்று செங்கல்பட்டுக்கு அழைத்து வந்தனர். அதிகாலை 3 மணியளவில் திண்டிவனம் புறவழிச்சாலையில் வந்து கொண்டிருந்தபோது சிவஞானம் சிறுநீர் கழிக்க வேண்டும், வாகனத்தை நிறுத்தும்படி கூறியுள்ளார். இதனால் வரும் வழியில் ஒரு தனியார் ஓட்டல் அருகில் வாகனத்தை போலீசார் நிறுத்தினர். இதையடுத்து வாகனத்திலிருந்து இறங்கிய சிவஞானம் தனது அருகில் நின்றிருந்த காவலர்களான திருமால், சுதாகர் ஆகியோரை தள்ளிவிட்டுவிட்டு இருட்டான பகுதியை நோக்கி ஓடியதாக தெரிகிறது. அப்போது அவ்வழியே வேகமாக வந்த தனியார் ஆம்னி பஸ் ஒன்று சிவஞானத்தின் மீது மோதிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டது. இதில் படுகாயமடைந்த சிவஞானத்தை போலீசார், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிவஞானம் உயிரிழந்தார். இதுகுறித்து ரோஷணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ChennaiMarinaMaasiMagam

    மாசி மகத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியின் புகைப்படங்கள்

  • AlbinoTurtleheart

    உடலின் வெளிப்புறத்தில் இதயத்துடன் பிறந்துள்ள அபூர்வ வெள்ளை ஆமை: ஆச்சரியத்தில் ஆராய்ச்சியாளர்கள்!

  • ModiSalmanDelhi

    சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் இந்தியா வருகை...நேரில் சென்று வரவேற்ற பிரதமர் மோடி: புகைப்படங்கள்

  • SuperSnowMoon2k19

    அதிக ஒளியுடனும், பூமிக்கு மிக அருகிலும் தெரிந்த சூப்பர் மூன்: ரம்மியமான அரிய நிகழ்வை கண்டு ரசித்த மக்கள்!

  • 20-02-2019

    20-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்