கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தேசிய சிறப்பு பேரிடர் மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும் : வைரமுத்து பேட்டி
2018-12-09@ 01:28:13

தஞ்சை: கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை தேசிய சிறப்பு பேரிடர் மாவட்டங்களாக அறிவித்து நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கவிஞர் வைரமுத்து வலியுறுத்தினார். தஞ்சை அருகே வல்லத்தில் நேற்று, வைரமுத்து நிருபர்களிடம் கூறியதாவது: கஜா புயல் பாதிப்பை பிரதமர் வந்து பார்வையிட்டிருக்க வேண்டும். இது மிகப்பெரிய பாதிப்பு. சில ஆண்டுகளுக்கு பிறகும் மீளுமா என்பது சந்தேகமாக உள்ளது. ஒவ்வொரு குடும்பமும் தங்களை மீட்டுக் கொள்வதற்கு மத்திய, மாநில அரசுகள் பொறுப்பு எடுத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் வாழ்க்கையை இரு கைகளால் இரு அரசுகளும் ஏந்தி கொள்ள வேண்டும்.
புயல் பாதித்த பகுதிகளை தேசிய சிறப்பு பேரிடர் மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும். மின்சாரத்தை இழந்துவிட்டு மக்கள் வாழ்க்கையை நினைத்து கூட பார்க்க முடியாது. மின்சார ஊழியர்களும் புயல் பாதித்த பகுதிகளில் முழு திறமையை பயன்படுத்தி பணியாற்றி வருகின்றனர். அவர்களை குறை கூற முடியாது. மேகதாது அணை கட்டுமானத்தை 2 மாநில பிரச்னையாக கருதாமல் இந்தியாவின் பிரச்னையாக, சர்வதேச பிரச்னையாக கருத வேண்டும். இவ்வாறு வைரமுத்து கூறினார்.
மேலும் செய்திகள்
நெல்லை மாநகர ஆயுதப்படை வளாகத்தில் ஊர்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு
குடிநீர் வினியோகம் பாதிப்பின்றி முக்கடல் அணை சுரங்கப்பாதை குழாய் உடைப்பை சரி செய்யும் பணி தீவிரம்
அனுமதிசீட்டு ஸ்கேன் ஆகாததால் அரசு பஸ் மூன்றரை மணி நேரம் நிறுத்தி வைப்பு: நாங்குநேரி டோல்கேட்டில் பரபரப்பு
நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழா: அலங்கரிக்கப்பட்ட மின்ரதத்தில் அம்மன் பவனி
ஓசூர் அருகே காவல்துறை மீது கல்வீச்சு: மஞ்சு விரட்டு நிகழ்ச்சியை தடுத்ததால் பொதுமக்கள் ஆத்திரம்
பொது தேர்வுகள் அனைத்தும் சிசிடிவி மூலம் கண்காணிப்பு :தேர்வு முறைகேடுகளை தடுக்க பள்ளிக் கல்வித்துறை அதிரடி
கனடாவில் உள்ள வீட்டில் பயங்கர தீவிபத்து: ஒரே குடும்பத்தை சேர்நத 7 குழந்தைகள் பலி
ட்ரோன்களைப் பறக்கவிட்டு வித்தியாசமான லாந்தர்ன் விளக்குத் திருவிழா: சீனாவில் நடைபெற்றது
ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் விழா கொண்டாட்டம்: லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்பு
கும்பமேளாவில் மகி பூர்ணிமா கோலாகலம் : கங்கைக்கு திரண்டு வந்து புனித நீராடிய பக்தர்கள்
பெங்களூருவில் ஆசியாவின் மிகப்பெரிய ஏர் ஷோ: ரஃபேல் உள்ளிட்ட கண்கவர் விமானங்கள் சாகசம்