SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

60 ஆண்டாக கிருதுமால் நதி புறக்கணிப்பால் விவசாயிகள் கொதிப்பு வைகையில் நீர் திறக்கக்கோரி போராட்டம் : மதுரை அருகே நான்கு வழிச்சாலையில் பரபரப்பு

2018-12-09@ 01:27:09

மதுரை:  வைகை அணையிலிருந்து கிருதுமால் நதியில் தண்ணீர் திறக்கக்கோரி, மதுரை விரகனூர் அருகே நான்கு வழிச்சாலையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். வைகை அணையில் இருந்து கிருதுமால் நதிக்கு 60 ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீர் திறக்கப்பட்டது. இதன்மூலம் மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் 200க்கும் அதிக மான கிராமங்களில், 2 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன் பெற்று வந்தனர். அதற்குப்பின் மதுரை மண்டல பொதுப்பணித்துறை, கிருதுமால் நதிக்கு தண்ணீர் திறந்து விடவில்லை.  4 மாவட்ட கலெக்டர்களிடமும் விவசாயிகள் பலமுறை புகார் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. கிருதுமால் பாசன விவசாயிகள் சங்கத்தினர் நீதிமன்றத்தில் வழக்குகளும் தொடுத்துள்ளனர். வைகை நதியின் கிளை நதியான கிருதுமால் நதியின் பூர்வீக ஆயக்கட்டு உரிமையை வழங்கவும், கிருதுமால் நதிக்குரிய பங்கினை ஆண்டுதோறும் வழங்கிட மறுக்கும் பொதுப்பணித்துறையை, தமிழக அரசைக் கண்டித்தும் நேற்று காலை மதுரை - ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் விரகனூர் பகுதியில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் திரண்டனர்.

அவர்கள் தண்ணீர் திறந்து விடக்கோரி கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் சாலை மறியலில் ஈடுபட அமர்ந்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கவே போலீசார் கேட்டுக்கொண்டதையடுத்து ஆர்ப்பாட்டம் மட்டும் நடந்தது. இந்திய தேசிய லீக் கட்சி மாநிலத்தலைவர் பசீர் அகமது தலைமை வகித்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் துவக்கி வைத்து பேசும்போது, ‘‘திமுக ஆட்சியில் கிருதுமால் நதியை தூர்வாரி 3 செக் டேம்கள் கட்டக்கோரினோம். அப்போதைய முதல்வர் கருணாநிதி 150 கோடி செலவில் அதனை நடைமுறைப்படுத்தினார். பின்னர் வந்த ஆட்சியில் அதிகாரிகள் திட்டத்தை கிடப்பில் போட்டதுடன், தண்ணீர் திறந்து விடவில்லை. விவசாயிகளின் வயிற்றில் அடித்து விட்டனர். இதற்கு பொதுப்பணித்துறையும், அரசும்தான் பொறுப்பு. மேகதாது பகுதியில் 5 ஆயிரம் கோடியில் அணை கட்ட மோடி அரசு ஒப்பு கொண்டுள்ளது. மத்திய அரசு தமிழக மக்களை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது’’ என்றார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

  • libya_sandai11

    தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

  • thuppaki-12jk

    13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

  • hurricane_12

    அமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்